Home Blog Page 1307

மியான்மர் உள்ளிட்ட   நான்கு  நாடுகளைச் சேர்ந்த பெண்களை திருமணம் சவுதி அரேபியா தடை

மியான்மர் ,வங்கதேசம், சாத் மற்றும்   பாகிஸ்தான், ஆகிய 4 நாடுகளைச் சேர்ந்த பெண்களை திருமணம் செய்ய  தன் நாட்டு மக்களுக்கு சவுதி அரேபியா தடை விதித்துள்ளது.

பாகிஸ்தான், வங்கதேசம், சாத் மற்றும்  மியான்மர் ஆகிய 4 நாடுகளைச் சேர்ந்த 5 இலட்சம் பெண்கள் சவுதி அரேபியாவில் வசிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த 4 நாடுகளைச் சேர்ந்த பெண்களை திருமணம் செய்ய சவுதி அரேபிய ஆண்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த 4 நாடுகளின் பெண்களை திருமணம் செய்ய விரும்பும் சவுதி அரேபிய ஆண்கள் இனி கடும் கட்டுப்பாடுகளை சந்திக்க நேரிடும் என அந்நாட்டின் மெக்கா நகர காவல் துறை இயக்குநர் மேஜர் ஜெனரல் அசாப் அல்-குரேஷி கூறியதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தான் உள்ளிட்ட 4 நாடுகளின் பெண்களை திருமணம் செய்ய விரும்பும் ஆண்கள்முறைப்படி அரசுக்கு விண்ணப் பிக்க வேண்டும். இதைப் பரிசீலித்து அனுமதி வழங்கினால் மட்டுமே திருமணம் செய்து கொள்ள முடியும். விவாகரத்து பெற்ற ஆண்கள் அடுத்த 6 மாதங்கள் வரை வேறு ஒரு பெண்ணைதிருமணம் செய்து கொள்வதற்கு விண்ணப்பிக்க முடியாது. 25 வயதுக்கு மேற்பட்டவராக இருப்பதுடன் அதை உறுதிப்படுத்தும் வகையில் மாவட்ட மேயரால் வழங்கப்பட்ட ஆவணத்தை சமர்ப் பிக்க வேண்டும். அடையாள ஆவணம், குடும்பத்தினர் பற்றிய விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

காயத்ரி மந்திரம் கொரோனாவை ஒழிக்க உதவுமா- ஆய்வில் இறங்கி ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனை

காயத்ரி மந்திரம் மற்றும் மூச்சுப் பயிற்சி கொரோனா சிகிச்சையில் உதவுமா என்பது குறித்து ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனை ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகின்றது.

இந்த ஆய்வுக்கு இந்திய அரசின் அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நிதியுதவி அளித்திருக்கிறது. மேலும், இந்த ஆய்வை மேற்கொள்ள இந்திய மருத்துவக் கவுன்சிலில் முறைப்படி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, எய்ம்ஸ் மருத்துவமனையில் நுரையீரல் மருத்துவத் துறை பேராசிரியர் மருத்துவர் ருச்சி துவா ‘தி இந்து’ ஆங்கில நாளிதழிடம் கூறும்போது, “காயத்ரி மந்திரம், பிராணயாமம் பயிற்சிகள் மேற்கொண்டோருக்கு உடல் சோர்வு குறைந்திருக்கிறதா? மனப்பதற்றம் நீங்கியிருக்கிறதா என்று ஆய்வு மேற்கொள்ளப்படும். இந்த முயற்சியில் யோகா குறித்து ஆராய்ச்சி செய்வோரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சி ரியாக்டிவ் புரதம் மூலம் நுரையீரலில் உள்ள அழற்சி எவ்வாறு குறைகிறது என்பதை ஆய்வு செய்வோம். அடுத்த 2 முதல் 3 மாதங்களுக்கு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும்” என்றார்.

மேலும், இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள மத்திய அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நிதியுதவிக்கு விண்ணப்பித்திருந்ததாகவும், ரூ.3 இலட்சம் உதவி கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்கள், ஊடகவியலாளர்களுக்கு கோட்டா கடும் எச்சரிக்கை

ஊடக நிறுவனங்களின் உரிமையாளர் தான் நினைக்கும் விதத்தில் நாட்டை கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச ஊடக சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துவது குறித்தும் எச்சரித்துள்ளார்.

வலப்பனையில் இடம்பெற்றுள்ள கலந்துரையாடல் ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஊடகங்க நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஊடக சுதந்திரம் குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது :

ஊடக நிறுவனங்களில் புதுமையானவர்களே உள்ளனர். ஊடக சுதந்திரம் என்பது ஊடக நிறுவனத்தின் உரிமையாளரின் சுதந்திரம் அல்ல. அதுவல்ல ஊடக சுதந்திரம். அது ஒரு மாஃபியா. ஊடக உரிமையாளருக்கு தேவையான விதத்தில் நாட்டைக் கொண்டு செல்வதற்கு முயல்வதாக இருந்தால் அது ஒரு மாஃபியா. அதுவே இடம்பெறுகின்றது. நாட்டில் அரசர்கள் இல்லை. மகாராஜாக்களும் இல்லை. மகாராஜாக்கள் இந்தியாவில் இருந்தார்கள். இங்கு மாஃபியாவே இடம்பெறுகின்றது.

மன்னர் நிர்வாகிகள் நாட்டை நிர்வகிக்க முயல்வதாக இருந்தால், அது என்னுடன் முடியாது. அதற்கு பாடம் கற்பிக்க எனக்குத் தெரியும். தேவையெனின் கற்பிக்கும் முறையும் எனக்குத் தெரியும். நான் ஊடக சுதந்திரத்தை வழங்கியுள்ளேன். 14 மாதங்கள் நான் நாட்டை நிர்வகித்துள்ளேன். எந்தவொரு ஊடகத்திற்கும் எந்தவொரு அழுத்தத்தையும் விடுக்கவில்லை. எனினும், அவர்கள் இதனை தவறாக பயன்படுத்தினால் அதற்கும் சட்டங்கள் உள்ளன. செய்ய முடியுமான முறைகளும் உள்ளன. அதனை நான் செயற்படுத்துவேன்.

அந்த ஊடகம் மாத்திரம் அல்ல தேசிய சிந்தனையில் உள்ள ஊடகங்களிலும் சிலர் கும்புக் மரங்களை வெட்டியதாக பொய்யான தகவல்களை வௌியிட்டிருந்தனர். யார் என்று நான் தேடிப் பார்த்தேன். அந்த ஊடகமே யுத்த காலத்தில் எமக்கு எதிராக செயற்பட்டது. அவர்களே தற்போது நுழைந்து இவ்வாறான பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றனர். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் எமக்கு எதிராக செயற்பட்ட குழுவினரே மீண்டும் எழுந்துள்ளனர்.”

சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் வரை போராட்டம் தொடரும் – கஜேந்திரகுமார் உரை

“ஐக்கிய நாடுகள் சபையும், ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையும், சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கைகளை அங்கீகரிக்காமல் பேச்சளவில் மட்டும் கையாளும் வரை சுயநிர்ணய உரிமைக்காக போராடுகின்ற அனைத்து மக்களும், தொடர்ந்தும் பாதிக்கப்படுபவர்களாகவே இருப்பார்கள்” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருக்கின்றார்.

ஐ.நா மனித உரிமைகன் பேரவையின் 46வது கூட்டத்தொடரில் விடயம் 08 இன் கீழான வியன்னா பிரகடனம் மற்றும் நடவடிக்கைக்கான திட்டமிடல் பற்றிய பொது விவாத்தில் இணையவழியில் கலந்து கொண்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையின் விபரம் வருமாறு:

“தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து இந்த விடயத்தை நான் இங்கு சமர்ப்பிக்கின்றேன்.

ஒரு மக்கள் கூட்டம் தமது வாழ்வின் பிரிக்க முடியாத உரிமையான சுயநிர்ணய உரிமையை பெற்றிட நியாயமான எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ள உரித்துடையவர்கள் என வியன்னா பிரகடனம் மற்றும் நடவடிக்கைக்கான செயல்திட்டம் (ஏனுPயு) வெளிப்படுத்துகிறது.

சிறிலங்கா அரசால் இழைக்கப்பட்ட கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் மத்தியில், தமிழ்த் தேசமானது தமது சுயநிர்ணய உரிமையை அனுபவிப்பதற்காக போராடிவருகிறது . சிறிலங்கா அரசானது வன்முறையை கட்டவிழ்த்தபோது, அதிலிருந்து தம்மை பாதுகாக்கவே தமிழர்களும் ஆயுதவழி போராட்டத்தை கையிலெடுக்க நேர்ந்தது.

2002 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் ஒரு யுத்த நிறுத்த உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. இரண்டு தரப்பினருக்கும் போர்முனையில் ஏற்பட்ட படைவலுச்சமநிலையே, இதற்கு அடிப்படை காரணமாகும்.

தமிழர் தாயகத்தின் ஏறத்தாழ 75 வீதமான நிலப்பரப்பானது தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள்ளும் ஆளுகைக்குள்ளும் இருந்த அப்போதைய களநிலை யதார்த்தத்தின் அடிப்படையில், ஈழத் தமிழரின் தேச அந்தஸ்தும் தனித்துவமான இறைமையும் அங்கீகரிக்கப்ட்டு , ஆகக் குறைந்தது இந்த அரசின் கட்டமைப்பு மறுசீரமைக்கப்பட்டு ஒரு சமஷ்டி ஆட்சி முறைமை உருவாகுமென்றே எதிர்ப்பார்க்கப்பட்டது. இதன் மூலமாக ஈற்றில் தமிழர்கள் தமது சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக்கூடிய ஏதுநிலை ஏற்பட்டிருக்கும்.

ஆனால் நடைமுறையில் நிகழ்த்தப்பட்டதோ முற்றிலும் வேறுபட்ட ஒரு நிகழ்வே. இந்த அரசானது, சர்வதேசத்த்தின் பல்வேறு தரப்புகளின் ஆதரவுடன், இராணுவ நடவடிக்கையையே தமது தீர்வாக முன்வைத்தது.

அந்த இராணுவ நடவடிக்கையினுடைய விளைவுகளே, சிறிலங்கா அரசு தமிழர்கள் மீது இனப்படுகொலையை மேற்கொண்டது என்ற குற்றச்சாட்டை தமிழர்கள் முன்வைக்கும் நிலையை உருவாக்கியது.

ஐக்கிய நாடுகள் சபையும், ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையும், சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கைகளை அங்கீகரிக்காமல் பேச்சளவில் மட்டும் கையாளும் வரை சுயநிர்ணய உரிமைக்காக போராடுகின்ற அனைத்து மக்களும், தொடர்ந்தும் பாதிக்கப்படுபவர்களாகவே இருப்பார்கள் என்பதை இங்கு வெளிப்படுத்திக்கொள்கிறேன்.

மலேசியாவுடனான தூதரக உறவுகளை துண்டித்தது வடகொரியா

மலேசியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் வட கொரியாவை சேர்ந்த, முன் சோல் மியோங் என்பவர் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்துள்ள அமெரிக்கா அவரை தங்களிடம் ஒப்படைக்கும்படி மலேசிய அரசை கேட்டுக்கொண்டது.

இதனை ஏற்று, முன் சோல் மியோங்கை அமெரிக்காவுக்கு நாடு கடத்த மலேசிய கோர்ட்டு அண்மையில் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து  மலேசியாவுடனான தூதரக உறவை துண்டிப்பதாக அறிவித்துள்ளது வட கொரியா. இதுகுறித்து வடகொரியாவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“மலேசியாவில் வசிக்கும் ஒரு வடகொரியருக்கு எதிராக அமெரிக்கா விதித்த பண மோசடி குற்றச்சாட்டுகள் அபத்தமான கட்டுகதை. எங்கள் அரசின் பிரதான எதிரியால் திட்டமிடப்பட்ட சதி.

அமெரிக்காவின் அழுத்தத்துக்கு அடிபணிந்து வடகொரியாவுக்கு எதிராக மிகப்பெரிய விரோத செயலை செய்த மலேசியாவுடனான தூதரக உறவுகளை முற்றிலுமாக துண்டிக்கிறோம். அமெரிக்கா இதற்கு உரிய விலை கொடுக்கும்“ என்றுள்ளர்.

அணு ஆயுத விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசியர்கள் மீதான வெறுப்புணர்வை அமெரிக்காவினர் கைவிடவேண்டும் – ஜோ பைடன் வலியுறுத்தல்

அமெரிக்காவின் ஜோர்ஜா மாகாணத்தில் உள்ள மூன்று வெவ்வேறு மசாஜ்  நிலையங்களில்  நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் ஆறு ஆசிய பெண்கள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 21 வயது சந்தேக நபர் கைதாகியிருப்பதாகவும் அவரே மூன்று இடங்களிலும் துப்பாக்கி சூடு நடத்தியிருக்கலாம் என கருதுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதற்கிடையே, உயிரிழந்த பெண்களில் நான்கு தங்கள் நாட்டு வம்சாவளியை சேர்ந்தவர்கள் என தென் கொரியா தூதரகம் உறுதிப்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

அட்லான்டா துப்பாக்கிச்சூட்டில் 6 ஆசிய பெண்கள் கொல்லப்பட்டதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். ஆசியர்கள் மீதான வெறுப்புணர்வை அமெரிக்காவினர் கைவிடவேண்டும். இனவெறி தாக்குதலை எதிர்த்து போராட வேண்டும் என்றார்.

அதே நேரம் ஜனாதிபதியும் நானும் இனவெறிக்கு எதிராக அமைதியாக இருக்க மாட்டோம். நாங்கள் இன்வெறிக்கு துணை நிற்க மாட்டோம். வன்முறை, குற்றங்கள் மற்றும் பாகுபாடுகளை வெறுப்பதை எதிர்த்து குரல்கொடுப்போம் என்று துணை அதிபர் கமலா ஹாரிஷ் தெரிவித்துள்ளார்.

பதுளை மாவட்டத்தில் பேருந்து விபத்து – இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் இன்று காலை ஏற்பட்ட  பேருந்து விபத்தில் 14 பேர் உயிரிழந்து, 35க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று அதிகாலை 7 மணியளவில் நடந்ததாக காவல்துறையினரின் தகவலில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

லுணுகல பகுதியிலிருந்து தலைநகர் கொழும்பை நோக்கி பயணித்த தனியார்  பேருந்து ஒன்று, 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்து நடந்தபோது  பேருந்தில்  சுமார் 50 பேருக்கும் அதிகமானோர் பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளதுடன், 35க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் 4ம் திகதி  சுமார் 350 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான பேருந்தில்  இருந்து 10 பேர் இறந்தனர், 18 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“எங்களுக்கு ஓட்டு போடும் உரிமை இல்லை!” – கூண்டுக் கிளிகளாக முகாம்களில் வாழும் தமிழர்கள்

தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளுக்கான முகாம்களில் சுமார் ஒரு இலட்சம் தமிழர்கள் உள்ளனர். இவர்கள் ஓட்டுரிமை இல்லாமலும், இந்தியக் குடியுரிமை இல்லாமலும் தவிக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படக் கூடிய அரசு, ஈழ அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமையும், ஓட்டுரிமையையும் பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இலங்கையில் போர் நடந்த காலங்களில், இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட தமிழர்கள் தாய் மண்ணான தமிழ்நாட்டுக்கு அகதிகளாக திரும்பிவந்தனர்.

இவர்களை வாழவைக்க மத்திய, மாநில அரசுகள், தமிழகம் முழுவதும் அகதிகளுக்காக 114 முகாம்களை திறந்தன. இவற்றில் தற்போது சுமார் ஒரு இலட்சம் நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நன்றி: புதிய தலைமுறை

ஜம்முவில் சிறைவைக்கப்பட்டுள்ள 150 ரோஹிங்கியா அகதிகள்: உச்சநீதிமன்றத்தில் மனு

ஜம்முவில் சிறைவைக்கப்பட்டுள்ள 150க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகளை விடுவிக்கவும் பாதுகாக்கவும் கோரியுள்ள மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.

ரோஹிங்கியா சமூகத்தைச் சேர்ந்த முகமது சலிமுல்லா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே, இது தொடர்பான விசாரணை வரும் மார்ச் 25ம் தேதி நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.

ஐ. நா. மனித உரிமை பேரவை தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு வழங்கும் – சுமந்திரன்

ஐ. நா. மனித உரிமை பேரவை தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என தமிழ்தேசிய கூட்டமைப்பு பெரும் நம்பிக்கை கொண்டுள்ளது என   நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் இந்து நாளிதழிற்கு தெரிவித்துள்ளார்.

இந்து நாளிதழிற்கு மேலும் அவர் தெரிவிக்கையில்,

“இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதா இல்லையா என்பது முற்றும் முழுதாக இந்தியாவை பொறுத்தவிடயம்.   ஆனால் இந்தியா இந்த தீர்மானத்திற்கு ஆதரவளிக்கவேண்டும் என்ற பெரும் எதிர்பார்ப்பு தமிழ்தேசிய கூட்டமைப்பிடம் உள்ளது.

மனித உரிமை பேரவையின் அமர்வில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தியா தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் குறித்து தெரிவித்தமை காரணமாக இம்முறை நாம் பெரும் எதிர்பார்ப்பை கொண்டிருக்கின்றோம்”  என்றார்.