ஆசியர்கள் மீதான வெறுப்புணர்வை அமெரிக்காவினர் கைவிடவேண்டும் – ஜோ பைடன் வலியுறுத்தல்

அமெரிக்காவின் ஜோர்ஜா மாகாணத்தில் உள்ள மூன்று வெவ்வேறு மசாஜ்  நிலையங்களில்  நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் ஆறு ஆசிய பெண்கள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 21 வயது சந்தேக நபர் கைதாகியிருப்பதாகவும் அவரே மூன்று இடங்களிலும் துப்பாக்கி சூடு நடத்தியிருக்கலாம் என கருதுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதற்கிடையே, உயிரிழந்த பெண்களில் நான்கு தங்கள் நாட்டு வம்சாவளியை சேர்ந்தவர்கள் என தென் கொரியா தூதரகம் உறுதிப்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

அட்லான்டா துப்பாக்கிச்சூட்டில் 6 ஆசிய பெண்கள் கொல்லப்பட்டதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். ஆசியர்கள் மீதான வெறுப்புணர்வை அமெரிக்காவினர் கைவிடவேண்டும். இனவெறி தாக்குதலை எதிர்த்து போராட வேண்டும் என்றார்.

அதே நேரம் ஜனாதிபதியும் நானும் இனவெறிக்கு எதிராக அமைதியாக இருக்க மாட்டோம். நாங்கள் இன்வெறிக்கு துணை நிற்க மாட்டோம். வன்முறை, குற்றங்கள் மற்றும் பாகுபாடுகளை வெறுப்பதை எதிர்த்து குரல்கொடுப்போம் என்று துணை அதிபர் கமலா ஹாரிஷ் தெரிவித்துள்ளார்.