விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம் குறித்து ஆராய்கிறார் பிரீத்தி பட்டேல்

விடுதலைப்புலிகள் மீதான தடை நீங்கம் குறித்து ஆய்வு செய்யுமாறு பிரித்தானியாவின் உள்த்துறை அமைச்சர் பிரீத்தி பட்டேலுக்கு பிரித்தானியாவின் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்தாகவும், அவர் அதனை ஆய்வு செய்வதாகவும் பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் த மெயில் என்ற நாளேடு தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளை பிரித்தானியா அரசு 2001 ஆம் ஆண்டு தடை செய்திருந்தது. எனினும் 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் விடுதலைப்புலிகள் எந்தவிதமான ஆயுத நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என்பதால் அதன் மீதான தடை நீக்கப்பட வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசு பிரித்தானியாவின் உள்த்துறை அமைச்சகத்திற்கு எதிராக வழக்கு தொடுத்திருந்தது.

விடுதலைப்புலிகள் மீதான தடை நீடிப்பு சட்டவிரேதமானது என பிரித்தானியா நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பான தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தது.

தாம் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்படாகவும் இறுதி முடிவுக்கு காத்திருப்பதாகவும் பிரித்தானியாவின் உள்த்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.