மாவீரர் நாள் என்பது பண்பாட்டு, கலாசார நிகழ்வாகவே மாறி விட்டது

620 Views

கலாசார நிகழ்வாகவே மாறி விட்டது

கலாசார நிகழ்வாகவே மாறி விட்டது

பகுதி 1

பகுதி 2

மாவீரர் நாள் என்பது பண்பாட்டு, கலாசார நிகழ்வாகவே மாறி விட்டது

கேள்வி:
நீங்கள் அமைத்த மாவீரர் துயிலுமில்லம் மக்களிடையே எவ்வாறான பார்வையைப் பெற்றிருந்தது. அது மதங்களைக் கடந்து அமைக்கப்பட்ட ஒரு வடிவமைப்பைக் கொண்டிருந்தது. அத்துடன் துயிலும் இல்லம் மக்களிடத்தில் எவ்வாறான எழுச்சியை ஏற்படுத்தியது?

பதில்:
உண்மையில் நான் அதனைக் கூறுவேனாக இருந்தால், மாவீரர் நாள் என்பது பண்பாட்டு கலாசாரமாகவே மாறிவிட்டது. அன்றைய நேரத்தில் 1989 ஆம் ஆண்டு தலைவர் காட்டுக்குள் போராளிகள் மத்தியில் ஒரு உரையை நிகழ்த்தியிருந்தார். அவ் உரை எந்தப் பத்திரிகைகளிலும் வெளிவரவில்லை. 1990 ஆம் ஆண்டு மாவீரர் நாள் தொடர்பான தலைவருடைய அறிக்கை பத்திரிகையிலும், எங்களுடைய புலிகளின்குரல் வானொலியிலும்  வெளிவந்திருந்தது. அதைத் தொடர்ந்து அந்த உரை வெளிநாடுகளிலும் வெளிவந்தது.

அதேநேரம் பெற்றோர்களை கௌரவித்திருந்தோம். ஆலயங்களில் மணியோசை அடிக்கும் போது அனைவரும் வீடுகளில் விளக்கேற்றுமாறு  கேட்டுக்கொண்டோம். இதேப் போலவே நாங்கள் 89 ஆண்டு 90 ஆம் ஆண்டுகளிலும் செய்திருந்தோம்.

1991 ஆம் ஆண்டு நாங்கள் இவ்வாறு சுடலை ஒன்றைக் கட்டிவிட்டோம் என புதுவை அண்ணையிடமும், மாத்தையா அண்ணையிடமும் ஒரு சனிக்கிழமை ஒரு கூட்டத்தில் தெரிவித்திருந்தோம்.

கலாசார நிகழ்வாகவே மாறி விட்டதுஅப்போது தான் புதுவை அண்ணை மாவீரர் துயிலும் இல்லம் என்னும் சொற்பதத்தையும் கூறியிருந்தார். அந்தச் சொற்பதம் கூட்டத்தில் எல்லோருடைய கூட்டு முடிவாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மாவீரர் துயிலும் இல்லத்தில் நாங்கள் மாவீரர் நாளைக் கொண்டாட வேண்டும் என்ற ஒரு மரபை அந்த கூட்டத்தில் முடிவெடுத்து, தலைவருக்கும் அறிவித்து, தலைவரும் ஏனைய தளபதிகளும் அதனை ஏற்றுக் கொண்டு, 1991 ஆம் ஆண்டு மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் நாள் கொண்டாடும் மரபு உருவாகியது.

மாவீரர் நாள் நினைவு கூரப்படும்  போது இவ்வாறாகத் தான் செய்ய வேண்டும் என்ற ஒரு சுற்றறிக்கை தமிழீழ அரசியல் பிரிவினரால் வெளியிடப்பட்டு, ஒவ்வொரு அரசியல் துறை பொறுப்பாளர்களும் அந்த மரபில்  அதைக் கடைப்பிடித்தார்கள்.

துயிலும் இல்லம் என்பது எவ்வாறு கட்டப்பட வேண்டும் என்று தலைவரினால் தேசிய அளவில் அறிவிக்கப்பட்டது. எல்லோரும் கட்ட வேண்டும் என்றும் அறிவித்திருந்தார்.

நாங்கள் யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 4 பிரிவுகளாக இருந்தோம். வடமராட்சி, தென்மராட்சி, தீவகம், வலிகாமம். அதில் வலிகாமத்திற்கு முதலாவது  துயிலும் இல்லம் உருவாக்கப்பட்டது. அதேநேரம் தென்மராட்சிக்கு 1991 ஆம் ஆண்டு உடனே கட்டப்பட்டது. வடமராட்சியிலும் , தீவகத்திலேயும் கட்டப்பட்டது.

தென்மராட்சிக்குத் தமிழ்செல்வனும், வலிகாமத்திற்கு கிளியண்ணை தளபதியாக அதேநேரம் துயிலும் இல்லம் கட்டும் போது தீவகத்திற்கு தளபதியாக இருந்தவர். இப்படி சூசை அண்ணை வடமராட்சிக்கு இருந்தவர். இப்படியாக இருந்த    சிலர் உயிருடன் இருக்கின்றனர்.

புதுவை அண்ணை, அரசியல் துறையைச் சேர்ந்த எல்லோரும் அதனை சிந்தித்து பெயர்களில் மாற்றங்களைக் கொண்டு வந்து 1991 ஆம் ஆண்டு துயிலும் இல்லத்தில் செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானித்தோம்.

அப்போது தான் மக்களும் நாங்களும் போராளிகளும் சரி அதில் பொது ஈகைச்சுடர் ஒன்றினை ஏற்ற வேண்டும் என்று முதலாவது மாவீரர் நாள் நடக்கும் போ, துயிலுமில்லத்தில் அந்த நேரம் பிரதித் தலைவராக இருந்த மாத்தையா அண்ணை ஈகைச்சுடரினை ஏற்றினார்.

பானு அண்ணை கோட்டையில் ஏற்றினார். அதேநேரம் மணியோசை ஒலித்ததும் மௌன அஞ்சலியைச் செலுத்தி, தீபத்தை ஏற்றும் போது 1991 ஆம் ஆண்டு அப்போது துயிலுமில்லப் பாட்டு வரவில்லை. அப்போது நாங்கள் “ஓ மரணித்த வீரனே உன் சீருடையை உனக்கு தா ” என்ற பாடலைப் போட்டனாங்கள்.

பொதுவான பாட்டுக்கள் மெதுவாக போய்க் கொண்டிருந்தன. அதேநேரத்தில் மக்கள் மௌன அஞ்சலியையும் செலுத்தி, ஈகைச்சுடரினை ஏற்றி அந்த சமாதிக்கு மேலே அவர்கள் விழுந்து தங்களுடைய பிள்ளைகளின் நினைவுகளை சத்தம் போட்டு அழுது, தங்களுடைய மனச்சுமையை குறைத்ததை பார்க்கக் கூடியதாகவும் இருந்தது. அந்த நேரம் சோகமும், வீரமும் கலந்த எழுச்சியாக தான் நாங்கள் அதனை பார்க்கின்றோம்.

கலாசார நிகழ்வாகவே மாறி விட்டதுஅந்த லைற் ஒளிவெள்ளங்கள் லஸ்பிக்கர் மோகன்மாமா என்பவர் பூட்டுவார். எல்லா நிகழ்ச்சிக்கும் அவர்தான் பூட்டுபவர் யாழ். மாவட்டத்தில் சிங்கம் சவுண்ட் சேர்விஸ் எண்டு வைச்சிருந்தவர். இப்பவும் வைத்திருக்கிறார் இப்பவும் உயிருடன் இருக்கிறார்.

இவர்கள் எல்லோருடய கூட்டு முயற்சியாகவும், எல்லோருடய சிந்தனையின் வெளிப்பாடாகவும் இந்த நிகழ்வு 1991ம் ஆண்டு நடைபெற்றது. அதே நேரத்தில் நாங்கள் கோயில் வளைவுகள் போல எல்லா சந்திகளிலும் கட்டினோம். அந்த வளைவுகள் எழுச்சியை ஏற்படுத்தியிருந்தது.

எல்லா சந்திகளிலும் கட்டியிருந்தோம். சிவப்பு மஞ்சள் கொடிகளைக் கட்டியிருந்தோம். லைற்றுகளை பூட்டி மிகவும் எழுச்சியாகதான் மாவீரர் நாளை நடாத்துவதற்கு திட்டமிட்டிருந்தோம். அந்த எழுச்சிக்குள்ளும் ஒரு சோகம் என்பதை துயிலும் இல்லங்களில் பார்க்கக் கூடியதாக இருந்தது.

மாவீரர் வளைவுகளை பற்றி நான் சொல்லும் போது வளைவுகளை நாங்கள் சந்திக்கு சந்தி யாழ் மாவட்டத்தில் கட்டி அந்த வளைவுகளை எந்த பிரதேச பொறுப்பாளர் திறம்பட செய்கின்றார் அந்த வளைவுகளுக்குரிய புள்ளிகளை போட்டு அவர்களை ஊக்குவிக்கிறதற்காகவும், உற்சாகத்தை கொடுக்கிறதற்காகவும் பரிசில்களை வழங்கினாங்கள்.

அந்த பரிசில்களை மதிப்பீடு செய்வதற்கு ஐங்கரநேசன் மாஸ்டர் இன்றைக்கு பசுமை இயக்கத்தின் தலைவராக இருக்கிறார். அவர் தான் அந்த காலங்களில செயற்பட்டவர். அவருடைய மாணவர்களும் அவரும் தேனீக்கள் என்ற ஒரு அமைப்பை வைத்திருந்தவர்கள். அந்த அமைப்பால் அந்த மதிப்பீடுகளை செய்து எந்த வளைவு முதலாம், இரண்டாம் , மூன்றாம் இடங்களை  பெறுகின்றது என்ற மதிப்பீட்டை செய்து யாழ் மாவட்ட அரசியல் நிர்வாகத்திற்கு கொண்டு வந்து தந்தவையள்.

அதனையும் நாங்கள் வளைவுகள் என்று நாங்கள் கட்டியது சம்பந்தமாக நினைவு கூருகின்ற போது அவர்களையும் நாங்கள் மறக்க முடியாது என்பதனை நான் இந்த வேளையில் தெரிவித்து கொள்கின்றேன்.

பின்னர் மரபு வழியில் மக்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு பூப்போடுவதும் அதே நேரம் பாடசாலைகளிலிருந்த பிள்ளைகள் வந்து அதனைப் பார்ப்பதும் கிட்டத்தட்ட வரலாறு என்று சொல்கின்ற வரலாற்று இடங்களை பார்ப்பதுபோல் பார்க்கின்ற ஒரு சூழலையும் அது ஏற்படுத்தியிருந்தது.

ஆகவே இந்த மரபு என்பது அந்த இடத்தை நாங்கள் அமைத்ததன் விளைவாக மக்களால் இயல்பாக கடைப்பிடிக்கக்கூடிய ஒரு உணர்வைத்தான் அந்த இடம் ஏற்படுத்தியது.

இந்த மரபு என்பது அந்த இடத்தை அமைத்ததன் விளைவாக ஏற்படுத்தப்பட்டது. மக்களால் இயல்பாகவே கடைப்பிடிக்ககூடிய உணர்வைத்தான் அந்த இடம் ஏற்படுத்தியது. அன்றும் சரி இன்றும் சரி  ஒரு ஆலயத்தில் மக்கள் கடவுளுக்கு எப்படி மதிப்பைக் கொடுக்கிறார்களோ அப்படி ஒரு மரபை தோற்றிவித்தது. இந்த எழுச்சிக் கட்டங்கள் அழிக்கப்பட்டாலும், மனங்களில் உள்ள அந்த நினைவுகளோ அந்த கல்லறைகளோ அழிக்கப்படாது அவை மாவீரர் துயிலுமில்லம் இருக்கும் இடம் என்பதுதான் மாவீரர் துயிலும் இல்லம் என்ற சொற்பதத்திற்கும் பொருத்தமானது.

அந்த சொற்பதங்களைச் சரியான முறையில் பாவித்து சரியான முறையில் மாவீரர்களுடைய நினைவுகளை நாங்கள் தொடர்ந்தும் கடைப்பிடிப்பதுதான் அந்த மாவீரர்களுக்கு செய்கின்ற ஒரு கடமையாக இருக்கும் என்பதுதான் இந்த நேரத்தில் என்னுடைய கருத்தாக இருக்கின்றது.

கேள்வி:
கலாசார நிகழ்வாகவே மாறி விட்டது2009க்கு பின்பதாக அல்லது யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட்டதன் பின்னராக மாவீரர்களுடைய எழுச்சி சின்னம் என்பது முற்றுமுழுதாக அழிக்கப்பட்டு விட்டது. அதாவது தமிழர் பிரதேசங்களில் நினைவுச் சின்னமான மாவீரர் துயிலும் இல்லம் இல்லை எனும் அளவிற்கு இலங்கை இராணுவம் முற்றாக அழித்துவிட்டது. அந்த புறச்சூழலிலே சிலர் புலம்பெயர் தேசங்களில் அவற்றை நிறுவ வேண்டும் இந்த சின்னங்களை நிறுவி அந்த அடையாளங்களை பேணவேண்டும் என்ற அடிப்படையில் புலம்பெயர் தேசங்களில் இந்த மாவீரர் துயிலுமில்லங்கள் அமைக்கப்பட்டது. இந்த சிந்தனை சரியா? அல்லது இந்த மாவீரர்களுடைய சினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டதன் அடிப்படை நோக்கத்தோடு இந்த சிந்தனை ஒத்துப்போகின்றதா? அல்லது அதில் ஏதாவது தவறுகள் இருக்கின்றனவா?

பதில்:
உணர்வுபூர்வமான நடவடிக்கை. இடங்கள் மாறினாலும் ஆட்கள் இடம்பெயர்ந்தாலும் மாவீரர்களுடைய உரித்துடையவர்கள் மாவீரர்களை நினைவு கூரவேண்டும். அவர்களுடன் களமாடியவர்கள் இன்றும் புலம் பெயர்தேசங்களுடன் உலகப்பரப்பில் பல்வேறு இடங்களில் வாழ்கின்றார்கள். மாவீரர் நாள் என்பது தேசியத்தலைவர் இருக்கும் போது 52 நாடுகளில் கொண்டாடப்பட்ட ஒரு நாள். எங்கெங்கு தமிழன் இருந்தானோ அங்கெல்லாம் அந்த நினைவுகள் கொண்டாடப்பட்டது.

இங்கே நினைவுகள் கொண்டாடப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இந்த மாவீரர் துயிலும் இல்லம் என்ற சொற்பதம் வரும் போது மாவீரருடைய சொற்பததத்தை பாவிப்பதுதான் சரி. இந்த கருத்துக்கு முரண்பாடான சொற்பதம் அதாவது மாவீரர் துயிலுமில்லம் என்பது மாவீரர்கள் துயில்கொள்கின்ற இடம். ஆகவே மாவீரர்களுடைய உடம்பு இல்லாத இடத்திற்கு அந்த சொற்பதத்தை பாவிக்காது, அது அவர்கள் உண்மையாக உணர்ச்சி போக்கிலே அல்லது எழுந்த மானத்திலே அந்த கருத்துக்களை பேசும்போது புண்படுத்துவதாகத்தான் நான் பார்க்கின்றேன்.

அதே நேரத்தில் அந்த சொல்லாடலை தவிர்த்து மாவீரர் நினைவாலயம் மாவீரரை நினைவு கொள்கின்ற மண்டபம் என்ற சொல்லாடல்களை பயன்படுத்துவதுதான் புலம்பெயர் தேசத்தை பொறுத்தவரை பொருத்தமாக இருக்கும் என்பது தான் என்னுடைய தாழ்மையான அபிப்பிராயமும்கூட. இந்த சொற்பதங்களைப் பாவிக்கும்போது அதற்குரிய அர்த்தத்துடன் தான் பாவிக்க வேண்டும். அர்த்தம் இல்லாமல் பொருளில்லாமல் கதைப்பதென்பது அறிவுபூர்வமான செயலாக இருக்காது.

ஆகவே அந்த நிலமையிலிருந்து மாறுபட்டு மாவீரர்களுடைய நினைவுகளை எந்த உலகப்பரப்பில் வாழ்ந்தாலும் அதனை நினைவு கொள்ள வேண்டிய தேவை உள்ளது. ஏனென்றால் 50.000 ற்கும் மேற்பட்டவர்கள் மாவீரர்களாக இருக்கின்றார்கள். அவர்களுடைய உறவுகள் என்று பார்த்தால் 2 இலட்சம் பேருக்குகிட்ட உறவுகள் உலகப்பரப்பில் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள். அந்த மண்ணிலும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஆகவே நினைவாலயம் என்கின்ற சொற்பதத்தை நினைவு என்ற சரியான சொற்பதத்தையும் பாவித்து கொண்டாடப்பட வேண்டும் என்பதுதான் யதார்த்தமான உண்மையாக இருக்கின்றது.

கேள்வி:கலாசார நிகழ்வாகவே மாறி விட்டது
மாவீரர் துயிலுமில்லங்கள் சிதைக்கப்பட்டன. சிதைக்கப்படும் போது மனித நாகரிகத்திற்கு அப்பாற்பட்ட ஒரு விடயமாகத்தான் பார்க்கப்பட்டது. அந்தவகையில் மாவீரர் துயிலுமில்லம் சிதைக்கப்பட்டதோடு நீங்கள் மாவீரர் துயிலுமில்லங்களை நிறுவிய ஒருவர். அதனை ஆரம்பித்து ஆரம்ப கருவை உருவாக்கியதிலிருந்து பல மாவீரர்களை விதைத்து அதனை நிறுவியவர் எனும் வகையில் அந்த மாவீரர்களின் நினைவுச்சின்னம் சிதைக்கப்படும் போது உங்களுடைய எண்ணங்கள் அல்லது உங்களுடைய மனக்குமுறல் எவ்வாறிருந்தது?

பதில்:
சிந்தனைதான் என்னுடையது. இதை நிறுவியது ஒரு கூட்டு முயற்சியாகவே நிறுவினோம். இப்படியான ஒரு சூழலை உருவாக்கி இன்றைக்கு இந்த துயிலும் இல்லங்கள் எதிரிகளை பொறுத்தவரையில் அவர்கள் கல்லறைகளைத்தான் சிதைத்தார்கள் ஆகவே அவர்கள் கல்லறைகளை சிதைக்கும் போது உண்மையில் அவர்கள் யுத்த தர்மத்தையோ அல்லது மனிதாபிமானத்தையோ கடைப்பிடிக்காமல் நடந்தபோது மிகவும் திரும்பவும் உயிருடன் வைத்து மீண்டும் கொல்லப்பட்டு இருக்கின்றோம்.

மன ரீதியாக எதிரியின் வன்முறைகள் அட்டூழியங்கள் கூடும்போது தமிழ்மக்களாக இருந்தாலும் சரி ஆறறிவுள்ள எவருமே வந்து அதற்கெதிராக போராடக்கூடிய மனநிலையைத்தான் அது ஏற்படுத்தியிருக்கின்றது. ஆகவே அந்த நினைவுகள் மிண்டும் மீண்டும் அழியவிடாமல் மக்கள் மனங்களை அதாவது பொதுவாக சிந்திக்க கூடியவர்கள் உட்பட எல்லோரிடத்திலும் தான் ஏற்படுத்தியிருக்கின்றது.

வன்முறை கூடும் போது அதற்கு எதிராக புரியக்கூடிய மொழியிலே திரும்பவும் நாங்கள் அதை கொடுக்கின்றபோது அவர்கள் திருந்தக்கூடிய வாய்ப்பு அல்லது சமாதானம் பிறக்கக்கூடிய வாய்ப்பு என்பது ஏற்படுகின்றது. நாங்கள் இந்த அழிவிலிருந்து மீள்வதென்பது உண்மையாகக் சிந்திக்ககூடியது. அந்த நினைவுகளை பேணவேண்டும் என்பதை நாங்கள் சிந்தித்து அவர்களுடைய நினைவுகளையும் மாவீரர்களுடைய சிந்தனைகளையும் எவ்வாறு உலகத்துடன் சிந்தித்து எப்படி அறிவுபூர்வமாக ஒர் அரசியல் வடிவமாக திரும்ப நாங்கள் மீள் எழுச்சி பெறவேண்டும் என்பதுதான் அவர்கள் அழிக்கும் போது ஏற்பட்ட சிந்தனையாகத்தான் இருக்கின்றது. அவர்கள் இவ்வாறு செய்யக்கூடியவர்கள் என்பது கடந்த கால அரசியல் வரலாறு, கடந்த கால அனுபவங்கள் சிங்களவர்கள் என்னத்தை செய்வார்கள் என உலகத் தமிழர்கள் அறிந்த ஒரு உண்மை. ஆகவே அதிலிருந்த மீள்வதற்கான நடவடிக்கைகளை உலகத்தமிழினம் செய்யலாம். எமது சமூகத்திலிருந்த வெளியே தெரியக்கூடிய மாதிரியான நடவடிக்கைகள் நடக்கவேண்டும் என்பதைத்தான் சமூகம் எதிர்பார்க்கின்றது. அறிவுபூர்வமான மாவீரர்களின் சிந்தனைகளை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதற்கான சிந்தனையை உருவாக்கியதுதான் சிங்கள அரசின் துயிலுமில்ல அழிப்பு நடவடிக்கை என்றுதான் நான் கருதுகின்றேன்.

முற்றும்.

ilakku Weekly Epaper 159 December 05 2021 Ad மாவீரர் நாள் என்பது பண்பாட்டு, கலாசார நிகழ்வாகவே மாறி விட்டது

1 COMMENT

Leave a Reply