கோவிஷீல்டு(Covishield)மற்றும் கோவக்சின்(Covaxin) ஆகிய தடுப்பு மருந்துகளின் இரு வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்துவது குறித்து ஆய்வு செய்ய இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகம் அனுமதி அளித்துள்ளது.
இது குறித்த ஆய்வு மற்றும் மனித உடலில் செலுத்தி மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியால் மேற்கொள்ளப்படும்.
இந்தியாவில் பெரும்பான்மையாக வழங்கப்படும் இந்த இரு தடுப்பூசிகளையும் இரு வேறு தடுப்பூசிளாக செலுத்தினால் நல்ல பலன் கிடைப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு தெரிவித்துள்ளது.
எனினும் இந்த ஆய்வு முடிவுகள் இன்னும் துறைசார் வல்லுநர்களால் ஆராயப்படவில்லை. அவ்வாறு வல்லுநர்கள் ஆராய்ந்து இந்த ஆய்வு முடிவுகளை அங்கீகரித்தால், இந்தியாவில் வெவ்வேறு தடுப்பு மருந்துகளின் இரண்டு தடுப்பூசிகளை வழங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும் என எதிர்பார்க்கப் படுகின்றது.