பிரிட்டன் தூதுவருடன் ஹக்கீம் முக்கிய பேச்சு

190 Views

10 4 பிரிட்டன் தூதுவருடன் ஹக்கீம் முக்கிய பேச்சுஇலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் சாரா ஹல்டன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு இடையிலான முக்கிய சந்திப்பு நடை பெற்றது.

கொழும்பிலுள்ள பிரிட்டன் தூதுவரின் உத்தியோக பூர்வ வாசஸ்தலமான வெஸ்ட் மினிஸ்டர் ஹவுஸில் இந்தச் சந்திப்பு நேற்று இடம் பெற்றது.

இதன் போது இலங்கையில் முஸ்லிம் சமூகத்தைப் பாதிக்கும் அண்மைய நடவடிக்கைகள் தொடர்பாகக் கலந்துரையாடியதாக பிரிட்டன் தூதுவர் தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இலங்கையில் சட்டத்தின் ஆட்சி மற்றும் அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய நல்லிணக்க முயற்சிகளுக்கு பிரிட்டன் ஆதரவு வழங்கும் என்றும் சாரா ஹல்டன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 137

ilakku Weekly Epaper 137 July 04 2021 பிரிட்டன் தூதுவருடன் ஹக்கீம் முக்கிய பேச்சு

Leave a Reply