மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவு நடைமுறைக்கு வந்தால், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்போது இலங்கை தற்போது அனுபவித்து வரும் GSP+ வர்த்தகச் சலுகையைத் தக்கவைத்துக் கொள்வதில் பாதிப்பு ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் நீண்டகாலமாக மரண தண்டனைக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள நிலையில், GSP+ சலுகையைத் தொடர்வதற்கான இலங்கையின் முயற்சியிலும் இந்த முடிவு நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து, மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்தை ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) அறிவித்திருந்த நிலையில் மேற்குறிப்பிட்ட தகவல் வெளியாகியுள்ளது.



