போர்ச்சுகல்லில் தஞ்சம் புகுந்த ஆப்கான் பெண்கள் கால்பந்து அணி

165 Views

ஆப்கான் பெண்கள் கால்பந்து அணி

ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்பு அங்கு பெண்களின் உரிமைகள் தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளன. இதனையடுத்து, ஆப்கான் பெண்கள் கால்பந்து அணியினர் போர்ச்சுகல்லில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

ஏற்கனவே தலிபான்கள் ஆட்சியில் இருந்த போது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து இருந்தனர். அதில் விளையாட்டு போட்டிகள் நடக்கக்கூடாது என்பது முக்கியமானதாகும்.

மேலும் பெண்கள் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க கூடாது என்றும் தடை விதித்து இருந்தனர். அதை மீறுபவர்களுக்கு கொடூர தண்டனைகளையும் அவர்கள் வழங்கினார்கள்.

இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள தலிபான்கள் அதைபோல கொடூர தண்டனைகளை வழங்கலாம் என்று கருதப்படுகிறது. அதன் காரணமாக பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் வேறு நாடுகளில் தஞ்சம்புகுந்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் பெண்கள் கால்பந்து அணி   உயிருக்கு பயந்த  நாட்டை விட்டு வெளியேறி அவர்கள் தற்போது போர்ச்சுகல்  நாட்டில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

இதையடுத்து அந்த வீராங்கனைகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாக போர்ச்சுகல் அரசு அறிவித்துள்ளது.

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021

Leave a Reply