கடந்த மாதம் வட மாகாணத்தில் மாத்திரம் கொரோனாவால் 9337 பேர் பாதிப்பு

145 Views

கொரோனாவால் 9337 பேர் பாதிப்பு


வடக்கு மாகாணத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தில் கொரோனாவால் 9337 பேர் பாதிப்பு அடைந்துள்ளதுடன், 348 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத் திணைக்களத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது.

வடக்கு மாகாணத்தில் செப்டம்பர் மாதத்தில் அதிகப்படியாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 776 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 152 பேர் உயிரிழந்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில் 2 ஆயிரத்து 467 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 130 பேர் உயிரிழந்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் ஆயிரத்து 986 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன், 43 பேர் உயிரிழந்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் 672 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மன்னார் மாவட்டத்தில் 436 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இது வரையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டும் 16 ஆயிரத்து 852 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதுடன் 413 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021

Leave a Reply