மலேசியா: மனித கடத்தலில் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் உட்பட 362 பேர் மீட்பு 

492 Views

இந்தியர்கள் உட்பட 362 பேர்

இந்தாண்டு மலேசியாவில் நடத்தப்பட்ட 77 தேடுதல் நடவடிக்கைகளின் மூலம்  மனித கடத்தலில் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் உட்பட 362 பேர் மீட்கப்பட்டுள்ளதாக  மனித கடத்தல் தடுப்பு மற்றும் குடியேறிகள் கடத்தல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. 

இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் வங்கதேசம், இந்தோனேசியா, இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், மனித கடத்தல் கும்பலைச் சேர்ந்த 163 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“மனித கடத்தல் கும்பல் பாதிக்கப்பட்டவர்களை வைத்து பெரும் லாபம் ஈட்ட அவர்களை தற்காலிக தொழிலாளர்களாக, பாலியல் அடிமைகளாக பயன்படுத்தியிருக்கின்றனர்,” எனக் கூறியிருக்கிறார் குடியேறிகள் கடத்தல் தடுப்புப் பிரிவின் அதிகாரி Hazril Kamis.

Leave a Reply