தமிழ் அகதி குடும்பம் அவுஸ்திரேலியாவில் முன்பு வாழ்ந்த இடத்திற்கு திரும்ப முடியாத நிலை

574 Views

தமிழ் அகதி குடும்பம்

பிரியா- நடேசலிங்கம் எனும் தமிழ் அகதி குடும்பம் அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் பிலோயெலா நகருக்குத் திரும்பக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக தருணிகாவிற்கு வீசா வழங்கவில்லை என்று இந்தக் குடும்பத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுப்பவர்கள் கூறுகிறார்கள்.

தருணிகாவின் பெற்றோர்கள் பிரியா, நடேஸ் மற்றும் அவரது மூத்த சகோதரி கோபிகா ஆகியோருக்கு மூன்று மாத இடைக்கால வீசா வழங்குவதற்கு, அமைச்சர் (Federal Circuit Court) நீதிமன்றத்தில் உறுதியளித்தார்.

இந்தக் குடும்பத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களுக்கு அமைச்சரின் முடிவு ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது. “இவர்கள் நான்கு பேருக்கும் வீசா வழங்குவதற்கு அமைச்சரிடம் அதிகாரம் இருக்கிறது. ஆனால் மூவருக்கு வீசா வழங்கி விட்டு, சிறுமி தருணிகாவிற்கு மட்டும் வீசா வழங்காமல் இருப்பது எமக்கு வினோதமாகப் படுகிறது” என்று இவர்களது குடும்ப நண்பரும் நீண்ட நாள் ஆர்வலருமான Angela Fredericks கூறினார்.

ilakku.org/ilakku-weekly-epaper-148-september-19-2021

Leave a Reply