ஹைதி குடியேறிகளை வெளியேற்றும் அமெரிக்கா

369 Views

ஹைதி

கரீபிய நாடான ஹைதியில் இருந்து அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இன்றி குடியேறியவர்கள், ஹைதிக்கு மீண்டும் கொண்டு வந்துவிடப்பட்டுள்ளனர்.

போர்ட்டா ப்ரின்ஸ் நகரில் உள்ள விமான நிலையத்தில் அவர்களை அழைத்து வந்த ஜெட் விமானம் மீண்டும் கிளம்பியபோது, சிலர் மீண்டும் விமானத்தில் ஏற முயற்சித்தனர். சிலர் அந்த விமானம் மீது தங்கள் காலணிகளை வீசினர்.

டெக்ஸாஸின் எல்லையோர நகரம் ஒன்றில் இருந்து அமெரிக்காவுக்குள் புலம்பெயர்ந்தவர்களை விமானம் மூலம் திருப்பி அனுப்பும் நடவடிக்கையை அமெரிக்கா கடந்த வாரம் தொடங்கியது.

அமெரிக்காவினுள் நுழைய அமெரிக்க – மெக்சிகோ எல்லைப்பகுதி ஒன்றில் சுமார் 13,000 குடியேறிகள் காத்திருக்கின்றனர்.

கொலம்பியா – பனாமா எல்லையிலும் அமெரிக்காவில் குடியேற விரும்பும் பல்லாயிரம் பேர் சிக்கியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக அமெரிக்காவின் டெக்சாஸ் எல்லையில் அகதிகள் தஞ்சம் புகுந்திருப்பதை படம் பிடித்துள்ள ஆளில்லா விமானத்தின் காணொளிக் காட்சிகள் வெளியாகியிருந்தன.

தவறான நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட்டதால், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டெல் ரியோ முகாமிலிருந்து கிட்டத்தட்ட 4 ஆயிரம் ஹைதி நாட்டு அகதிகள் அமெரிக்காவுக்கு இடம் பெயர்த்தியுள்ளதாகவும், மேலும் பலர் 4 விமானங்களின் மூலமாக வெளியேற உள்ளதாகவும் அந்நாட்டுத் தகவல்கள் தெரிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ilakku.org/ilakku-weekly-epaper-148-september-19-2021

Leave a Reply