யாழ்ப்பாணத்தில் 72 பேர் உட்பட வடக்கில் நேற்று 93 தொற்றாளர்கள்

163 Views

கொரோனா- யாழ். நேற்று 72 பேர் வடக்கு 93கொரோனா- யாழ். நேற்று 72 பேர் வடக்கு 93; மானிப்பாயில் 27 பேர், யாழ். மாநகரில் 20 பேர் என யாழ். மாவட்டத்தில் 72 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 93 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்று 528 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில், 93 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன்படி, மானிப்பாய் பிரதேச மருத்துவமனையில் 27 பேரும், யாழ்ப்பாணம் மாநகர மருத்துவ அதிகாரி பிரிவில் 20 பேரும், யாழ். போதனா மருத்துவமனையில் 9 பேரும், கோப்பாய் பிரதேச மருத்துவமனையில் 9 பேரும், சங்கானை பிரதேச மருத்துவமனையில் இருவரும், தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் இருவரும், சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் இருவரும், பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் ஒருவருமாக யாழ். மாவட்டத்தில் 72 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

வவுனியா மருத்துவ அதிகாரி பிரிவில் 8 பேருக்கும், வவுனியா பொது மருத்துவமனையில் 5 பேருக்குமாக வவுனியா மாவட்டத்தில் 13 பேர் தொற்றாளர்களாக இனங் காணப்பட்டனர்.

முல்லைத்தீவு பொது மருத்துவமனையில் மூவர், வெலி ஓயா மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவர் என முல்லைத்தீவில் நால்வருக்கும், மன்னார் பொது மருத்துவமனையில் மூன்றுபேர், மூன்றுமுறிப்பு ஐ.சி.சியில் ஒருவர் என நால்வருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

ilakku-weekly-epaper-144-august-22-2021

Leave a Reply