மோசமடையும் இலங்கை நிலை: கொரோனா தொற்றால் மேலும் 198 பேர் மரணம்

மோசமடையும் இலங்கை கொரோனா நிலைமோசமடையும் இலங்கை கொரோனா நிலை; இலங்கையில் மேலும் 198 பேர் கொரோனாத் தொற்றால் மரணித்துள்ளனர் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 7 ஆயிரத்து 948 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றுமுன்தினம் உயிரிழந்த 198 பேரில் 119 ஆண்களும், 79 பெண்களும் அடங்குகின்றனர் என்றும் அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்களுள் 30 வயதுக்குக் குறைவான ஆண் ஒருவரும் அடங்குகின்றார் என்றும் தெரிக்கப்பட்டுள்ளது.

ilakku-weekly-epaper-144-august-22-2021

Leave a Reply