டொன்பாஸ் களமுனைகளில் ஏற்படும் இழப்புக்கள் சொல்லும் செய்தி என்ன? | வேல்ஸ் இல் இருந்து அருஸ்

டொன்பாஸ் களமுனைவேல்ஸ் இல் இருந்து அருஸ்

டொன்பாஸ் களமுனைகளில் ஏற்படும் இழப்புக்கள்

உக்ரைன் மீதான ரஸ்யாவின் படை நடவடிக்கை நான்காவது மாதத்தை அண்மித்துள்ளது மோதல்களும் இழப்புக்களும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றதே தவிர மோதல்கள் முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. இழப்புக்களை எண்ணியும், ரஸ்யாவின் படை பலத்தை கருத்தில் கொண்டும் உக்ரைன் சரணடைய முற்பட்டாலும் அதனை தடுப்பதில் மேற்குலகம் முனைப்பாக நிற்கின்றது.

இந்த வாரம் கூட பிரான்ஸ் அதிபர் மக்ரோன், ஜேர்மன் அதிபர் ஸ்கோல்ஸ் மற்றும் இத்தாலி அதிபர் ரக்கி ஆகியோர் உக்ரைனின் தலைநகர் கிவிவ் நகரத்திற்குச் சென்று உக்ரைன் அதிபருக்கு போரை தொடர்வதற்கான நம்பிக்கையை ஊட்டியுள்ளனர்.
A1 டொன்பாஸ் களமுனைகளில் ஏற்படும் இழப்புக்கள் சொல்லும் செய்தி என்ன? | வேல்ஸ் இல் இருந்து அருஸ்
ஆனால் போரை தொடர்ந்து நடத்துவதற்கு மிகப்பெருமளவான கனரக ஆயுதங்கள் தேவை என தெரிவித்துள்ள உக்ரைன், மிக நீண்ட ஆயுதப்பட்டியல் ஒன்றையும் மேற்குலகத்திடம் சமர்ப்பித்துள்ளது.

500 டாங்கிகள், 2000 துருப்புக்காவி வாகனங்கள், 300 பல்குழல் உந்துகணை செலுத்திகள், 1000 கெவிட்சர் ரக பீரங்கிகள் மற்றும் 1000 ஆளில்லா உளவு மற்றும் தாக்குதல் விமானங்கள் போன்றவை உட்பட அதன் நீளம் அதிகம்.

போர் ஆரம்பமாவதற்கு முன்னர் தானியங்கி ஆட்டிலறி பீரங்கிகள், 607 மற்றும் 152 மி.மீ மற்றும் 122 மி.மீ வகைகளை சேர்ந்த 292 பீரங்கிகளை கொண்டிருந்ததுடன், 850 இற்கு மேற்பட்ட டாங்கிகள் மற்றும் கவசவாகனங்களையும் கொண்டிருந்தது உக்ரைன். ஆனால் தற்போது மீண்டும் மிகப்பெருமளவான ஆயுதங்களை தருமாறு அது கோரிக்கையை விடுத்துள்ளது.

A2 டொன்பாஸ் களமுனைகளில் ஏற்படும் இழப்புக்கள் சொல்லும் செய்தி என்ன? | வேல்ஸ் இல் இருந்து அருஸ்ரஸ்யாவின் பீரங்கிப் போரிற்கு தாக்குபிடிக்க வேண்டுமெனில் பெருமளவான பீரங்கிகளும், பல்குழல் உந்துகணை செலுத்திகளும் தேவை என உக்ரைன் தெரிவித்துள்ளது. போரின் ஆரம்பத்தை விட தற்போது உக்ரைன் படையினர் பெருமளவான இழப்புக்களைச் சந்தித்து வருகின்றனர்.

தினமும் 60 தொடக்கம் 100 படையினர் கொல்லப்படுவதாக கடந்த மாதம் உக்ரைன் அதிபர் தெரிவித்திருந்தார். அதன் பின்னர் இந்த மாதத்தின் ஆரம்பத்தில் தினமும் 200 தொடக்கம் 500 படையினர் கொல்லப்படுவதாக உக்ரைன் அதிபரின் கட்சியின் தலைவரும், ரஸ்யாவுடன் இடம்பெற்ற பேச்சுக்களில் பங்குகொண்டவருமான டேவிட் அரகமியா தெரிவித்திருந்தார்.

ஆனால் தற்போது அவர் தினமும் 1000 படையினரை உக்ரைன் இழந்து வருவதாக தெரிவித்துள்ளார். டொன்பாஸ் பகுதிக்கு களமுனை மாற்றப்பட்ட பின்னர் உக்ரைன் படையினர் துருப்புக்களை இழப்பது மட்டுமல்லாது, நிலங்களையும் இழந்து வருவதுடன், படைக்கலங்களையும் கணிசமாக இழந்து வருகின்றனர்.

அது மட்டுமல்லாது நேட்டோ கூட்டமைப்பு நாடுகள் வழங்கிய 155 மி.மீ வகையான பீரங்கிகளின் 5000 தொடக்கம் 6000 வரையிலான எறிகணைகளை தினமும் பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார் உக்ரைனின் புலனாய்வுத்துறை பிரதி அதிகாரி ஸ்கெபிற்ஸ்கி.

A3 டொன்பாஸ் களமுனைகளில் ஏற்படும் இழப்புக்கள் சொல்லும் செய்தி என்ன? | வேல்ஸ் இல் இருந்து அருஸ்

இருந்தபோதும் தம்மிடமுள்ள ஆயுதங்களும், நேட்டோ கூட்டமைப்பு வழங்கிய ஆயுதங்களும் ஐரோப்பாவில் உள்ள எந்த இராணுவத்தையும் வீழ்த்த போதுமானது. ஆனால் ரஸ்ய படையினரை வீழ்த்த போதுமானதல்ல எனத் தெரிவித்துள்ளார் உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர் ரெஸ்நிகோவ்.

உக்ரைனின் இந்த கருத்துக்களில் பல உண்மைகள் இருந்தாலும், சில சமயங்களில் மேற்குலகத்திடம் இருந்து ஆயுதங்களையும், நிதியையும் பெறுவதற்காக தமது தரப்பு இழப்புக்களை நாள் ஒன்றுக்கு 1000 படையினர் என உக்ரைன் கூறுவதாகவும் சந்தேகிக்க தோன்றுகின்றது. மேற்குலக நாடுகள் வழங்குவதாக வாக்குறுதி வழங்கிய 30 பில்லியன் டொலர்களில் கணிசமான அளவு இன்னும் கிடைக்கவில்லை என்பதனால் அதனைப் பெறுவதற்காகவும் இருக்கலாம்.

அது ஒரு காரணமாக இருந்தாலும், ரஸ்ய தலைமையிலான கூட்டணி படையினரின் தாக்குதலில் உக்ரைன் படையினர் கணிசமான அளவில் படைக்கலங்களையும், படையினரையும் இழந்து வருவது உண்மையே. கடந்த வாரம் முற்றுகைக்கு உள்ளான செவெறொடொநெஸ்ற் பகுதியில் உள்ள உர உற்பத்தி நிலையத்தில் 2400 இற்கு மேற்பட்ட உக்ரைன் படையினரும், 1200 இற்கு மேற்பட்ட பொதுமக்களும் தமது படையினரின் முற்றுகைக்குள் சிக்கியுள்ளதாக டொனஸ்க் மக்கள் குடியரசின் படையினர் தெரிவித்துள்ளனர்.
A4 டொன்பாஸ் களமுனைகளில் ஏற்படும் இழப்புக்கள் சொல்லும் செய்தி என்ன? | வேல்ஸ் இல் இருந்து அருஸ்
அவ்வாறு சிக்கியவர்களின் 40 பேர் வெளிநாட்டு படையினர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அவர்களை மீட்பதற்கு உக்ரைன் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற போதும், அவர்கள் சரணடைவதே ஒரே வழி என தெரிவித்துள்ளது ரஸ்யா. அதாவது மீண்டும் ஒரு மரியப்போல் முற்றுகைப்போராக இந்த களமுனை மாற்றம் பெற்றுள்ளது.

இழந்த பகுதிகளை தாம் மீட்கப்போவதாக உக்ரைன் அதிபர் அடிக்கடி கூறிவருகின்ற போதும், முற்றுகைக்குள் சிக்கியுள்ள தமது படையினரைக் கூட மீட்கமுடியாத நிலையிலேயே உக்ரைனின் படை பலம் உள்ளது என்பது தான் யதார்த்தமானது.

மேற்குலக நாடுகள் வழங்கிவரும் பெருமளவான ஆயுதங்கள் கூட அவர்களின் படை நடவடிக்கையில் அதிக பலனைக் கொடுக்கவில்லை. மறுவளமாக மேற்குலகம் வழங்கும் ஆயுதங்களில் கணிசமானவை களமுனைகளை அடைவதற்கு முன்னரே ரஸ்யாவின் கலிபர் ரக நீண்டதூர ஏவுகணைகளினால் அழிக்கப்படுவதும் உக்ரைன் படையினர் சந்திக்கும் மிகப்பெரும் பின்னடைவாகும். செய்மதிகளையும், ஆளில்லாத உளவு விமானங்களையும் அதிகளவில் பயன்படுத்தும் ரஸ்யா, மிகவும் துல்லியமாக தகவல்களை திரட்டுவதுடன், உக்ரைன் படையினருக்கான விநியோக வழிகளையும் முடக்கியுள்ளது.
A5 டொன்பாஸ் களமுனைகளில் ஏற்படும் இழப்புக்கள் சொல்லும் செய்தி என்ன? | வேல்ஸ் இல் இருந்து அருஸ்
அது மட்டுமல்லாது உக்ரைன் படையினரின் படைபல இழப்பு என்பதற்கு அப்பால் அங்கு சென்ற வெளிநாட்டு படையினரும் இழப்புக்களைச் சந்திக்க ஆரம்பித்துள்ளனர். மரியப்போலில் கைது செய்யப்பட்ட பிரித்தானியாவைச் சேர்ந்த இரண்டு படையினருக்கு டொனஸ்ற் மக்கள் குடியரசு மரணதண்டனையை கடந்த வாரம் வழங்கியிருந்த நிலையில், இந்த வாரம் உக்ரைனின் வடகிழக்குப் பகுதியான கார்க்கிவ் பகுதியில் இடம்பெற்ற சமரில் அமெரிக்காவின் இரு படையினர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈராக் போரில் பங்குபற்றிய பின்னர் ஓய்வுபெற்ற அமெரிக்காவின் சிறப்பு படை அதிகாரியான அலக்சாண்டர் டுரேகே மற்றும் அன்டி தாய் நிகோ ஆகியவர்களே கைது செய்யப்பட்டவர்கள் ஆவார்கள். 10 பேர் கொண்ட அவர்களின் அணியானது தாக்குதல் மற்றும் உளவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சமயம் இரண்டு ரி-72 ரக டாங்கிகள் சகிதம் அவர்களை திடீரென சுற்றிவளைத்த ரஸ்ய படையினர், சில மணிநேர சமரின் பின்னர் அவர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tamil News