312 Views
சர்வதேச நாணய நிதியம் ஆதரவளிக்கும்
இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் ஆதரவளிக்கும் என அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சர் கிளேர் ஓ நீல் (Clare O’Neill) தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சர், இன்று முற்பகல் கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்த போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத குடியேற்றம் மற்றும் ஆட்கடத்தலுக்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என்பது அவுஸ்திரேலியாவின் முந்தைய கன்சர்வேடிவ் அரசாங்கத்தின் கொள்கையாக இருந்தது. தற்போதைய புதிய தொழிற்கட்சி அரசாங்கத்தின் கொள்கையும் அதுவேயாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு அவுஸ்திரேலியா ஒருபோதும் இடமளிக்காது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.