போர்க் குற்றம் – இந்திய இராணுவத் தளபதிக்கு எதிராக வழக்கு

484 Views

இந்திய இராணுவத் தளபதிக்கு எதிராக வழக்கு

இந்திய இராணுவத் தளபதிக்கு எதிராக வழக்கு: இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஸ்மீர் பகுதியில் இந்திய இராணுவம் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் இந்திய இராணுவத் தளபதியும், ஏனைய அதிகாரிகளும் கைது செய்யப்பட வேண்டும் என்ற வழங்கு பிரித்தானிய காவல்துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட ஸ்ரோக் வைற் சட்ட நிறுவனம்  இதனை கடந்த செவ்வாய்க்கிழமை (18) மேற்கொண்டுள்ளது.

 இந்திய இராணுவத்தளபதி ஜெனரல் மனோச் முகுன்ட் நரவேன் மற்றும் உள்த்துறை அமைச்சர் அமித் சா அகியவர்களின் உத்தரவுக்கு அமைவாக இந்திய படையினர் பொதுமக்கள்இ ஊடகவியலாளர்கள் மற்றும் செயற்பாட்டளர்களை கடத்தி துன்புறுத்தி எவ்வாறு படுகொலை செய்தனர் என்பது தொடர்பான சாட்சியங்களையும் இந்த அமைப்பு சமர்ப்பித்துள்ளது.

2020 ஆம் ஆண்டில் இருந்து 2021 ஆண்டு வரையிலும் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் 2000 இற்கு மேற்பட்ட வாக்கு மூலங்கள் சாட்சியங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பெயர் குறிப்பிடப்படாத 8 இராணுவ உயர் அதிகாரிகள் நேரிடையாக தொடர்பு கொண்டுள்ளனர்.

உலக நீதி தொடர்பான சரத்துக்களின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகில் எங்கு குற்றம் நிகழ்ந்தாலும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு எதிராக அனைத்துலக மட்டத்தில் போர்க்குற்ற வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் தடவையாகும். காஸ்மீரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் தேவை என ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு 2018 ஆம் ஆண்டு கோரிக்கை விடுத்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Tamil News

Leave a Reply