மனுஸ் தீவில் சிறை வைக்கப்பட்டிருந்த போது உயிரிழந்த அகதி: சிகிச்சை குறித்து கவலை தெரிவித்துள்ள சுகாதார வல்லுநர்கள்

487 Views

சிறை வைக்கப்பட்டிருந்த போது உயிரிழந்த அகதி

சிறை வைக்கப்பட்டிருந்த போது உயிரிழந்த அகதி: அவுஸ்திரேலிய அரசால் மனுஸ்தீவில் சூடானிய அகதி அகமது சிறைவைக்கப்பட்டிருந்த போது, திடீரென கீழே விழுந்த பிறகு உயிரிழந்த விவகாரத்தில் அவருக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்து சுகாதார வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 2016ம் ஆண்டு அகமதுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட போது, அவருக்கு வயது வெறும் 27 மட்டுமே. அவர் அவுஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட அடுத்த சில தினங்களிலேயே உயிரிழந்து இருந்தார். இந்த சூழலில், அகமதை மனுஸ்தீவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு செல்வதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டதா என்ற கோணத்தில் தற்போது விசாரணை நடைபெற இருக்கிறது.

அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த சூடானிய அகதியான பயாசல் இசாக் அகமது கடந்த 2013 முதல் 2016(அவர் மரணிக்கும்) வரை மனுஸ்தீவில் சிறைவைக்கப்பட்டிருந்தார்.

Leave a Reply