இலங்கையில் அதிகரிக்கும் ஒமிக்ரோன்

இலங்கையில் அதிகரிக்கும் ஒமிக்ரோன்

இலங்கையில் அதிகரிக்கும் ஒமிக்ரோன்:ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்கூட பரிசோதனைகளில் மேலும் 75 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

12 கொரோனா மரணங்கள் இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். இதேவேளை, கொரோனாவைப் போன்றே மற்றுமொரு வைரஸ் காய்ச்சலும் டெங்கு காய்ச்சலும் பல மாகாணங்களில் பரவும் அபாயம் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டார்.

இவை ஒரே மாதிரியான நோய் அறிகுறிகளைக் கொண்டுள்ளதால், உடனடியாக வைத்தியரை அணுகுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்று ஏற்பட்ட 40 சிறுவர்கள் கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜீ.வீரசூரிய தெரிவித்தார்.