வவுனியா-காலாவதியான மருந்தை வழங்கிய தனியார் வைத்தியசாலை

IMG 20211013 121115 resize 21 வவுனியா-காலாவதியான மருந்தை வழங்கிய தனியார் வைத்தியசாலை

வவுனியா-காலாவதியான மருந்தை வழங்கிய தனியார் வைத்தியசாலை: வவுனியா குடியிருப்பு குளவீதியில் அமைந்துள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் காலாவதியான மருந்துகளை நோயாளியொவருக்கு வழங்கியமையால் குழப்பமான நிலமை ஏற்பட்டிருந்தது.

வவுனியாவை சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவருக்கு சுகவீனம் ஏற்பட்ட நிலையில் குறித்த வைத்தியசாலைக்கு சென்று நேற்றையதினம் சிகிச்சையினை முன்னெடுத்திருந்ததுடன், மருந்தினையும் பெற்றுச்சென்றிருந்தார்.

இந்நிலையில் அந்த மருந்தினை நேற்றையதினம் இரவு அவர் பயன்படுத்திய நிலையில் சுகயீனம் ஏற்பட்டதுடன் உடலில் சில மாற்றங்களையும் அவதானித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த மருந்துகளை சோதித்து பார்த்தபோது ஒருமாதத்திற்கு முன்பாகவே அவை காலாவதியாகியுள்ளமையினை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் இன்றையதினம் காலை குறித்த வைத்தியசாலைக்கு சென்ற அவர் அங்கு கடமையில் இருந்தவர்களிடம் விடயத்தினை தெரியப்படுத்தியதுடன், தர்க்கத்திலும் ஈடுபட்டிருந்தார். இதனையடுத்து அங்கிருந்த பணியாளர் காலாவதியான மருந்தை மூன்று மாதத்திற்கு பயன்படுத்தலாம் என நோயாளிக்கு தெரிவித்ததாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பாவனையாளர் அதிகாரசபையின் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், காலாவதியாகிய சில மருந்துகளையும் மீட்டிருந்ததுடன் வைத்தியசாலைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் பொதுமக்களிடத்தில் அதிர்ச்சியினை ஏற்ப்படுத்தியுள்ளதுடன், இவ்வாறான அலட்சியமான சம்பவங்களால் ஏற்படும் பாதிப்புக்கள் மேலும் தொடராமல் இருப்பதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்தனர்.

இந் நிலையில் குறித்த தனியார் வைத்தியசாலையின் உரிமையாளரான வைத்தியரிடம் இது தொடர்பில் கேட்டபோது, தமது வைத்தியசாலை இந்த தவறை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.

ilakku Weekly Epaper 151 october 10 2021 Ad வவுனியா-காலாவதியான மருந்தை வழங்கிய தனியார் வைத்தியசாலை

Leave a Reply