தாயக மேம்பாடு நேற்று இன்று நாளை தொடர்ச்சி வவுனியா மாவட்டம்: குளங்களும், ஆறுகளும் – தாஸ்

தாயக மேம்பாடு-வவுனியா மாவட்டம்

தாஸ்

தாயக மேம்பாடு நேற்றுதாயக மேம்பாடு-வவுனியா மாவட்டம்: கனகராயன் ஆறு, பாலி ஆறு, பறங்கியாறு ஆகிய பிரதான ஆறுகளும், கிளை ஆறுகள் உள்ள பகுதியாகவும் வவுனியா மாவட்டம் காணப்படுகின்றது. மிகவும் பெரியகுளம் பாவற்குளம் ஆகும். அத்துடன் 718 மத்திய சிறிய குளங்களைக் கொண்ட பிரதேசமாகும். இதில் 155 குளங்கள் கைவிடப்பட்ட நிலையிலும், 661 குளங்கள் பாவனையிலும் உள்ளன.

4 உதவி அரசாங்க அதிபர் பிரிவிலும், 102 கிராம சேவகர் பிரிவுகளையும்,  512 கிராமங்களையும் கொண்டது வவுனியா மாவட்டம் ஆகும்.

47,292 குடும்பங்களைச் சார்ந்த 1,84,444 மக்கள் இங்கு வசிக்கின்றனர். இதில் 83% தமிழர்களும், 9.7% சிங்கள மக்களும், 6.5% முஸ்லிம் மக்களும் வாழ்கின்றனர்.

இங்கு வசிக்கும் மக்கள் விவசாயம், பண்ணை வளர்ப்பு, சிறு கைத்தொழில், வியாபாரம் ஆகிய தொழில்களைச் செய்கின்றனர். வன்னி தேர்தல் தொகுதியானது வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக உள்ளது. 6 தேர்தல் தொகுதியை கொண்டது.

இன்று பல சிங்கள மக்கள் குடியேற்றங்கள் மூலம் திட்டமிடப்பட்டு நில அபகரிப்பு செய்யப்பட்டு வருகின்றது. குளங்களின் கீழ் ஒவ்வொரு கிராமங்களும் உள்ளது. பாவற்குளத்தில் 4,134 ஹெக்டெயர் நிலப்பரப்பும்.  நடுத்தரக் குளங்களின் கீழ் 2270 ஹெக்டெயர் நிலப்பரப்பும்,  அணைக்கட்டில் 600 ஹெக்டெயர் நிலப்பரப்பும் உள்ளது. குளங்கள் புனரமைப்புச் செய்வதற்கு 2018இல்  மட்டும் 100 மில்லியன் ரூபாய் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தாயக மேம்பாடு நேற்றுவவுனியா மாவட்டமானது, கிழக்கு எல்லையாக அனுராதபுரத்தையும், வடக்கு எல்லையாக முல்லைத்தீவையும், மேற்கு எல்லையாக மன்னார் மாவட்டத்தையும் கொண்டுள்ளது. கொழும்பு – யாழ் பிரதான வீதி –  புகையிரதப் பாதை,  இதேபோன்று மன்னார் – கொழும்பு புகையிரதப் பாதை என்பன இம்மாவட்டம் ஊடாகவே செல்கின்றன.

நாகர் காலத்தில் ஆறுகள் பல மறிக்கப்பட்டுக் குளங்கள் பல உருவாக்கப்பட்டன. இன்று குளங்கள் பல பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.  155 குளங்கள் கைவிடப்பட்ட நிலையில் உள்ளன. இன்றும் சின்னத் தம்பளையில் ஐந்து தலை நாகம் படமாக உருவாக்கப்பட்டு நாகர் காலத்தை நினைவுபடுத்துகின்றது.

1750 இல் விளாத்திகுளம் உட்பட 100க்கும் மேற்பட்ட குளங்கள் உடைப்பு எடுத்தது. இதன் பின்னரே வவுனிக்குளம் உருவாக்கப்பட்டது. 1890 ஆம் ஆண்டு வவுனியா மாவட்டம் உருவாக்கப்பட்டது.

இங்கு நெல் உற்பத்தி செய்யப்பட்டு, ஏனைய மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இன்று உணவுத் தேவைகளுக்காக ஏனைய மாவட்டத்தில் தங்கியிருக்கக் வேண்டிய நிலையில் உற்பத்திக் குறைவாகக் காணப்படுகின்றது.

தாயக மேம்பாடு300க்கும் மேற்பட்ட கிராம அபிவிருத்திச் சங்கம் பதிவு செய்யப்பட்ட போதும், சிங்களப் பிரதேசங்களில் சிறப்பாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, செயல்பாடு நன்றாக நடைபெறுகின்றது.

பாடசாலைகளைப் பொறுத்தவரையில், வவுனியா மாவட்டத்தில் 24 பாடசாலைகள் சிங்கள மொழி பாடசாலைகளாக உள்ளன.

மாவட்டத்தை பொறுத்தவரையில், ஏற்று நீர்ப்பாசனம் எதுவும் இல்லை. மக்கள் ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்தை எதிர்பார்க்கின்றனர். விவசாயத்தில் தன்னிறைவு காண வேண்டிய மாவட்டத்தில் பல இடங்களில் பயிர்ச் செய்கை மேற்கொள்ள முடியாத நிலைமை காணப்படுகின்றது.

பழமரச் செய்கைக்கு உரிய, பழகிய மண்வளம் காணப்பட்டபோதும், பழ மரச் செய்கை குறைவாக மேற்கொள்ளப்பட்டு வரப்படுகின்றது. பெரிய அளவில் உற்பத்திக்காக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டி உள்ளது.

நேற்று சிறுதானிய உற்பத்திகளான உளுந்து, பயறு, கௌபி, நிலக்கடலை ஆகியன அதிக அளவில் உற்பத்தி செய்யும் மாவட்டமாக வவுனியா மாவட்டம் இருந்தது. இன்று கிலோ 1000/-  ரூபாய்க்கு மேல் விற்பனை விலையாக காணப்படுகின்றது.

15,000இற்கு மேற்பட்ட குடும்பங்கள் வவுனியா மாவட்டத்தில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட போதும், அம் மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை.

தாயக மேம்பாடுஅவ்வாறு மீள் குடியேற்றத்துடன் சிறுதானிய உற்பத்தி, பண்ணை உற்பத்தி செய்வதற்கான வாழ்வாதாரத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டால், வவுனியா மாவட்டம் தன்னிறைவு மாவட்டமாக மாற்றப்படலாம். எனவே மேம்பாட்டில் ஆர்வமும், அக்கறையும் உள்ள மக்கள் சர்வதேச நிறுவனங்கள் ஊடாகவும், கொடையாளிகளும் அம் மக்களுக்கான வாழ்வாதார திட்டங்களுக்கு பல வழிகளிலும் நிதி உதவி செய்ய முன் வரவேண்டும் என்பதே வவுனியா மாவட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது.

எனவே புலம்பெயர் தேசங்களில் உள்ள மக்களும் எம் தாயகத்தின் மண் வளத்தை பாதுகாப்பதற்குரிய திட்டங்களை மேற்கொள்ள முன்வர வேண்டும்.

இன்று 150க்கும் மேற்பட்ட குளங்கள் கைவிடப்பட்டது போல,  இன்றைய நிலை தொடர்ந்தால், நாளை குடிநீர் தேவைக்கு கையேந்தி நிற்கும்  நிலையை உருவாக்கும். எனவே நாம் சிந்தித்து செயற்பட வேண்டும்.