நெடுந்தீவில் இரண்டு வாரங்களில் இரண்டு கோடி இழப்பு – இந்திய இழுவைப் படகுகளை தடுத்து நிறுத்துமாறு  வலியுறுத்தல்

IMG 20210808 WA0001 நெடுந்தீவில் இரண்டு வாரங்களில் இரண்டு கோடி இழப்பு - இந்திய இழுவைப் படகுகளை தடுத்து நிறுத்துமாறு  வலியுறுத்தல்

இந்தியக் கடற் றொழிலாளர்களின் அத்துமீறிய எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில் முறை காரணமாக தமது வாழ்வாதாரம் மோசமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றமையினால், எந்த வழியிலேனும் இந்தியக் கடற் றொழிலாளர்களை கட்டுப்படுத்துமாறு யாழ். மாவட்ட கடற் றொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் நெடுந்தீவு கடற் றொழிலாளர்களுக்கு இரண்டு கோடி 13 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் இழப்பினை இந்தியக் கடற் றொழிலாளர்கள் ஏற்படுத்தியுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தியக் கடற் றொழிலாளர்களின் அத்துமீறல் உட்பட தடை செய்யப்பட்ட தொழில் முறைகளை கட்டுப் படுத்துமாறு யாழ். மாவட்ட கடற் றொழிலாளர்களினால் தொடர்ச்சியான  கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில், கடற்றொழில் அமைச்சருடன்  யாழ். மாவட்டத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர் சமாசங்கள் மற்றும் கடற் றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட  கலந்துரையாடலில், இந்தியக் கடற் றொழிலார்களின் அத்துமீறல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டுள்ளது.

ilakku-weekly-epaper-141-august-01-2021