சுவாமிகள் உட்பட 30 மாணவர்க்கு கொரோனா; மட்டக்களப்பு ஆச்சிரமம் இழுத்து மூடப்பட்டது

8 1 சுவாமிகள் உட்பட 30 மாணவர்க்கு கொரோனா; மட்டக்களப்பு ஆச்சிரமம் இழுத்து மூடப்பட்டதுஇராமகிருஸ்ண மிசனின் கிழக்கு மாகாணத்திற்கான மட்டக்களப்பு கல்லடி ஆச்சிரமம் கொரோனா காரணமாக தனிமைப்படுத்தலுக்காக மூடப்பட்டுள்ளது.

இ.கி.மிசன் மட்டக்களப்புக் கிளை கல்லடி உப்போடை இராமகிருஸ்ணபுரத்தில் பாரியவளாகத்தில் இயங்கி வருகிறது. அதன் பரிபாலனத்தின் கீழுள்ள இராமகிருஸ்ண மிசன் சிறுவர் இல்லம் சாரதா சிறுமியர் இல்லம் ஆகியவற்றில் சுமார் 140 சிறுவர் சிறுமியர்கள் ஆத்மீக சூழலில் வாழ்ந்து வருகின்றனர்.

அங்குள்ள இரு சுவாமிகள் மற்றும் 30மாணவர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவ்வளாகம் தனிமைப்படுத்தலுக்காக மூடப்பட்டுள்ளது. ஏனைய மாணவிகளுக்கு நேற்றும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இ.கி.மிசனின் மட்டு.ஆச்சிரம மேலாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷ்யானந்தா ஜீ மஹராஜ் உதவிமேலாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ் ஆகியோருபட்பட 30மாணவர்களும் அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இத்தனிமைப்படுத்தல கடந்த வெள்ளிக்கிழமை(6) தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டது.

உதவிமேலாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜி மஹராஜ்ஜிடம் தொடபுர்பு கொண்டு கேட்ட போது சம்பவத்தை உறுதி செய்யததுடன் இதுவரை மாணவர்க்குத் தேவையான சத்துணவு விற்றமின்கள் அனைத்தையும் தினமும் வழங்கி வருவதாகவும் நாஙகள் பாதுகாப்பாக மாணவர்களை பராமரித்து வருவதாகவும் யாருக்கும் பயப்படுமளவிற்கு ஏதுமில்லையெனவும் தெரிவித்தார்.

வெளியிலிருந்து மிசன் ஆச்சிரமத்திற்கு சேவைக்காக வரும் ஒருவரூடாக இது தொற்றியிருக்கலாமென நம்பப்படுகிறது.

இ.கி.மிசன் சிறுவர் இல்லத்தில் தங்கியருந்த 50 மாணவர்களுள் 30 பேருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இ.கி.மிசன் சாரதா சிறுமியரில்ல மாணவிகளுக்கு அன்ரிஜன் சோதனை இன்று மேற்கொள்ளப்படவிருப்பதாக சுவாமி மேலும் தெரிவித்தார்.

மிசன் வளாகம் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதால் யாரும் உள்வரமுடியாது எனினும் மிசன் அபிமானிகள் உதவி வருவதாகவும் தனிமைப்படுத்தல் முடிவுற்றதன் பின்னர் மீண்டும் பிசிஆர் சோதனை செய்யப்பட்டு ஆச்சிரமம் திறக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

ilakku-weekly-epaper-141-august-01-2021