இந்தியா உள்ளிட்ட சில நாடுகளின் சுற்றுலா பயணிகள் இலங்கை வர அனுமதி

170 Views

இந்தியா உட்பட சுற்றுலா பயணிகளுக்கு இலங்கை அனுமதி

இந்தியா உட்பட சுற்றுலா பயணிகளுக்கு இலங்கை அனுமதி: செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளின் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவதற்கான அனுமதியை வழங்க தீர்மானிக்கப் பட்டுள்ளது.

முழுமையாக கொரோனா தடுப்பூசி   போடப்பட்ட இந்தியர்களுக்கு அடுத்த வாரம் முதல் எவ்விதத் தடையுமின்றி இலங்கைக்குள் நுழைய முடியும் என அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டி ஆராச்சி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“செப்டெம்பர் 1 முதல் கொழும்பிலிருந்து இந்தியாவின் மூன்று இடங்களுக்கு விமானங்கள் இயக்கப்படும். சென்னைக்கு  4 விமானங்கள், மும்பைக்கு 3 விமானங்கள் மற்றும் பெங்களூருக்கு ஒரு விமானம் என்ற ரீதியில் இயக்கப்படவுள்ளன.

முழுமையாக சுற்றுலாத்துறை  போடப்பட்ட சுற்றுலாப் பயணிகள் மட்டுமே இலங்கைக்கு வர முடியும். அவர்கள் விமான நிலையத்தில் பிசிஆர் சோதனை செய்ய வேண்டும். தங்களுக்கு தொற்று இல்லை என்பதை நிரூபிக்கும் நபர்கள் நாட்டைப் பார்வை யிடலாம்.   தற்போது அவர்களுக்கு சாதாரண நடைமுறைப்படி ஒரு மாத காலத்திற்கு விசா வழங்கப்படுகிறது” என்றார்.

இலங்கை குறித்த அணுகுமுறையை மாற்றப்போகிறதா இந்தியா? – அகிலன்

அதே நேரம் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிக்கையில்,

”இலங்கையினால் தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகள் தவிர்ந்த ஏனைய நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகை தர முடியும். இந்தியா தவிந்த ஏனைய நாடுகளை சேர்ந்த தடுப்பூசி ஏற்றாதவர்கள் நாட்டிற்கு சுற்றுலாவிற்கு வருகை தந்தால், 14 நாட்கள் தனிமைப்படுத்தலின் பின்னர் அவர்கள் சுற்றுலாவில் ஈடுபட முடியும்” என்றார்.

 

ilakku-weekly-epaper-144-august-22-2021

Leave a Reply