இலங்கை குறித்த அணுகுமுறையை மாற்றப்போகிறதா இந்தியா? – அகிலன்

இலங்கை குறித்த இந்தியா அணுகுமுறை மாறுமா?
இலங்கை குறித்த இந்தியா அணுகுமுறை மாறுமா? இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் தீவிரமாக அதிகரித்துவரும் நிலையில், இதற்கு எதிராக எவ்வாறான அணுகு முறையைக் கையாள்வது என்பது குறித்து இந்தியா ஆலோசனை நடத்தி வருவதாக அரசியல், இராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றம், அங்கு அதிகாரத்தைக் கைப்பற்றி யிருக்கும் தலிபான்களுடனான சீனாவின் உறவு என்பனவும் இந்தியாவைக் குழப்பும் விடயங்களாக உள்ளன.

இலங்கை குறித்த இந்தியா அணுகுமுறை மாறுமா?இந்தப் பின்னணியில் இலங்கை குறித்த இந்தியாவின் அணுகுமுறையில் அதிரடியான மாற்றம் ஒன்றை இவ்வருட இறுதியில் எதிர்பார்க்கலாம் எனக் கூறுகின்றார் இந்தியாவின்  ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவர். இந்தியாவின் இராஜதந்திர மட்டத்தில் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ள ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியும், பாதுகாப்பு, இராஜதந்திர ஆய்வாளருமான மேஜர் மதன் குமார், உத்தரபிரதேசத் தேர்தல் நடைபெற்று முடிந்தவுடன் இவ்வருட இறுதியில் இலங்கை குறித்த இந்தியாவின் புதிய அணுகுமுறையைக் காணக்கூடியதாக இருக்கும் எனக் கூறுகின்றார்.

இலங்கை தொடர்பான தமது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதையிட்டு இந்தியா சிந்திக்கத் தொடங்கியுள்ளது என்பதை வெளிப் படுத்தும் செய்திகள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. இலங்கையில் அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கம்தான் இதற்குக் காரணம்.  உலகம் முழுவதும் தீவிரமாகப் பரவியிருக்கும் கொரோனா பெருந்தொற்று காலத்தையும் சீனா நன்கு பயன்படுத்திக் கொண்டிருக்கின்றது. தடுப்பூசிகளை அதிகளவுக்கு வழங்கியதன் மூலமாகவும், கடனுதவிகளை வழங்கியும், இலங்கையுடனான பிணைப்பை இறுக்கமாக்கிக் கொண்டுள்ளது சீனா!

கடன் உதவியா? பொறியா?

சீனாவிடமிருந்து இலங்கை கடந்த 17ஆம் தேதியன்று 61.5 பில்லியன் இலங்கை ரூபாய் (6150 கோடி இலங்கை ரூபாய்) மதிப்பிலான கடனுதவியை உடன்படிக்கை யொன்றின் ஊடாக பெற்றுக் கொண்டுள்ளது. ஏற்கனவே பெற்றுக் கொண்டிருக்கும் கடனுதவிகளுக்கு மேலதிகமாகவே இதனை இலங்கை பெற்றிருக்கின்றது.

குறித்த அணுகுமுறையை மாற்றப்போகிறதா இந்தியா4 இலங்கை குறித்த அணுகுமுறையை மாற்றப்போகிறதா இந்தியா? - அகிலன்இலங்கைக்கான சீனத் தூதரகம் தனது ருவிட்டர் பக்கத்தில், பதிவொன்றின் ஊடாக இந்த தகவலை வெளியிட்டிருந்தது. இலங்கையின் கோரிக்கைக்கு அமையவே இந்த கடன் வழங்கப் பட்டுள்ளதாகவும், அந்த பதிவில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தக் கடனால் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்ற விமர்சனம் எழுந்துள்ள அதே வேளையில், வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்தவே கடன் வாங்கப் பட்டுள்ளது என்று இலங்கை அரசு தெரிவிக்கிறது.

கோவிட் ஒழிப்பு நடவடிக்கைகள், பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் மற்றும் நிதி ஸ்திரத் தன்மையை உறுதிப் படுத்துதல் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளுக்காக இந்த கடன் வழங்கப் பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

குறித்த அணுகுமுறையை மாற்றப்போகிறதா இந்தியா2 இலங்கை குறித்த அணுகுமுறையை மாற்றப்போகிறதா இந்தியா? - அகிலன்கொரோனா பெருந்தொற்று பரவ ஆரம்பித்த காலம் முதல், இலங்கை பாரிய பொருளாதார சிக்கல்களை எதிர் நோக்கி வருவகின்றது என்பது உண்மைதான். இலங்கையின் பிரதான வருமான வழியான சுற்றுலாத் துறை முற்றாக முடங்கி விட்டது. ஏனைய வருமான வழிகளும் பாதிக்கப் பட்டுள்ளதுடன், அந்நிய செலாவணி வருமானங்களும் குறைவடைந்துள்ளன.

குறித்த அணுகுமுறையை மாற்றப்போகிறதா இந்தியா6 இலங்கை குறித்த அணுகுமுறையை மாற்றப்போகிறதா இந்தியா? - அகிலன்இதனால், இலங்கை பாரிய பொருளாதார வீழ்ச்சிகளை சந்தித்து வருவதாக அரசாங்கம் தெரிவித்து வருகின்ற நிலையிலேயே, இந்த கடன் தொகை பெற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. எது எப்படியிருந்தாலும், சீனாவின் கடன் பொறிக்குள் இலங்கை மேலும் மூழ்கிப் போகும் நிலையைத்தான் இது வெளிப் படுத்துகின்றது. ஏனெனில் சீனா வழங்கும் கடனுக்கான வட்டி வீதம் அதிகம். அத்துடன், அதனைத் திருப்பிச் செலுத்து வதற்கான காலக்கெடு குறுகியதாகவே இருக்கும்.

அவ்வாறு குறுகிய காலத்தில் கடன் தொகையை செலுத்த தவறும் பட்சத்தில், நாட்டிலுள்ள சொத்துகளை சீனாவிற்கு எழுதிக் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாகவும் பொருளாதாரப் பேராசிரியர் ஒருவர் குறிப்பிடுகின்றார். அவ்வாறு இல்லையென்றால், பல்வேறு தேவையற்ற ஒப்பந்தங் களுக்குச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும் என அவர் தெரிவிக்கின்றார். இது இலங்கை எதிர்காலத்தில் மேலும் சீனாவின் வசமாகும் வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதைக் காட்டுகின்றது.

இந்தியாவின் அணுகுமுறை

இந்தியாவின் அணுகுமுறை இலங்கை தற்போதைய நிலையில் எதிர் கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்குத் தேவையானளவு உதவிகளைச் செய்யக் கூடிய நிலையில் இந்தியா இல்லை. ஆனால், சீனாவின் பொருளாதாரத்தைப் பொறுத்த வரையில் இது சாத்திய மானதாக இருக்கும். சீனா பலமான ஒரு பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது என்பது மட்டும் இதற்குக் காரணமல்ல. கடனாகக் கொடுக்கும் பணத்தை உடனடியாகவே வேறு வடிவங்களில் பெற்றுக் கொள்வதற்கான உபாயங்களை சீனா கையாள்வதும் இதற்குக் காரணம்.

குறித்த அணுகுமுறையை மாற்றப்போகிறதா இந்தியா5 இலங்கை குறித்த அணுகுமுறையை மாற்றப்போகிறதா இந்தியா? - அகிலன்உதாரணமாக குறிப்பிட்ட ஒரு அபிவிருத்தித் திட்டத் துக்காக என சீனா கடனை வழங்கும் போது, அந்தத் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கான ஒப்பந்தத்தையும் சீனா நிறுவனம் ஒன்றுக்கு வழங்குமாறே நிபந்தனை விதிக்கப்படுகின்றது. அதனால், கொடுத்த கடனைவிட இரண்டு மடங்கு தொகையை சீனாவால் மீளப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். அதனைவிட வட்டி வேறு. இவ்வாறு தான் சீனாவின் கடன்பொறி அமைக்கப்படுகின்றது. அந்தப் பொறியிலிருந்து மீள முடியாத ஒரு நிலைதான் இலங்கைக்கு ஏற்படும் என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்து.

இந்த நிலைமைகளை இந்தியாவும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றது. அம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுக நகர் என்பன சீனாவுக்குக் கொடுக்கப்பட்டமை இந்தியாவுக்கு ஏற்கனவே சீற்றத்தைக் கொடுத்திருந்தது. அதிலும் குறிப்பாக கொழும்பு துறைமுக நகர சட்டமூலத்தின் ஊடாக அதன் நிர்வாகம் தனியாகச் சென்றிருப்பதும் இந்தியாவின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இவை குறித்து இந்தியா மௌனமாக இருந்தாலும், கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் இந்தியாவுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த உடன்படிக் கையை இலங்கை ரத்துச் செய்தமைக்கு எதிராக இந்தியா அதிருப்தியை வெளிப் படுத்தியிருந்தது.

இலங்கையின் திட்டம்

இலங்கையின் திட்டம், இலங்கையைப் பொறுத்தவரையில் சீனாவின் ஆதிக்கத்திலிருந்து வெளியே வரமுடியாத ஒரு பொறியில் அது சிக்கிக் கொண்டிருப்பதாகவே இந்தியா கருதுகின்றது. அதேவேளையில், இலங்கையை மையப்படுத்திய சீனாவின் திட்டங்கள் வெறுமனே பொருளாதாரத்தை மட்டும் நோக்கமாகக் கொண்ட ஒன்றல்ல என்பது தெளிவாகத் தெரிகின்றது. சீனா தன்னுடைய பட்டுப்பாதைத் திட்டத்துக்கு இலங்கையை பலமாகப் பற்றிக் கொண்டிருக்கின்றது. அதே வேளையில், வட பகுதியிலும் சீனாவின் ஆதிக்கம் பரவலாக்கம் பெற்றுவருவது இந்தியாவுக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி யிருக்கின்றது.

இந்தப் பின்னணியில் தான் இந்தியா தன்னுடைய வெளிவிவகாரக் கொள்கையை மாற்றிக் கொண்டு இலங்கை விடயத்தில் கடும் போக்கில் செல்வதற்கான வாய்ப்புக்கள் குறித்து மேஜர் மதன்குமார் பேசுகின்றார். இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான தற்போதைய நெருக்கத்தை மட்டுப்படுத்த வேண்டுமானால் அதிரடியாக எதனையாவது செய்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இந்தியாவுக்குள்ளது. புதுடில்லியில் கொள்கை வகுப்பாளர்கள் இதுகுறித்து நுணுக்கமாக ஆராய்வதாகவும் தெரிவிக்கப் படுகின்றது.

இந்தியாவின் இந்த நிலை இலங்கைக்கும் தெரியாத ஒன்றல்ல. மிலிந்த மொரகொடைவைத் தூதுவராக அனுப்புவதன் மூலம் இந்தியாவின் சீற்றத்தைத் தணிக்க முடியும் என கொழும்பு திட்டமிடுகின்றது. மிலிந்த இந்தியப் பிரதமர் மோடியுடன் தனிப்பட்ட ரீதியில் நெருக்கமான ஒருவராகக் கருதப்படுபவர். குஜாராத் முதலமைச்சராக நரேந்திர மோடி இருந்த காலப் பகுதியில் அங்கு இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் மிலிந்த கலந்து கொண்டிருந்தார். அதன் மூலம் இருவருக்கும் இடையிலான உறவு நெருக்கமடைந்தது. இந்தியாவைச் சமாதானப் படுத்துவதற்கு மிலிந்த என்ன செய்யப் போகின்றார் என்பது தான் இப்போதுள்ள முக்கிய கேள்வி!

Leave a Reply