உக்ரேன் மீதான தாக்குதல் அடுத்த மாதம் ஆரம்பிக்கலாம்

உக்ரேன் மீதான தாக்குதல் அடுத்த மாதம்

உக்ரேன் மீதான தாக்குதல் அடுத்த மாதம் ரஸ்யா ஆரம்பிக்கலாம் என அமெரிக்க அரச தலைவர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ரஸ்யாவின் கோரிக்கைகளை அமெரிக்கா நிராகரித்ததை தொடர்ந்து இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவாகவே உள்ளதாக ரஸ்யா தெரிவித்துள்ளது. எனினும் தாக்குதல் நடத்துவதை அது மறுத்துள்ளது.

உக்ரேன் அதிபர் வொலொடிமீர் செலன்ஸ்கியுடன் கடந்த வியாழக்கிழமை (27) தொலைபேசியில் உரையாடும்போதே பைடன் இதனை தெரிவித்துள்ளார். எனினும் அமெரிக்கா தனது நட்பு நாடுகளின் உதவியுடன் உக்ரேனுக்கு ஆதரவுகளை வழங்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உக்ரேனின் தரைப்பகுதி பனியில் உறையும் போது கனரக ஆயுதங்களை நகர்த்துவது இலகுவானது அதற்காகவே ரஸ்யா காத்திருக்கின்றது என படைத்துறை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே மோதல்கள் ஆரம்பித்தால் ரஸ்யாவில் இருந்து மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் எரிபொருள் விநியோகத்தை நிறுத்துவோம் என அமெரிக்க எச்சரிக்கை விடுத்துள்ளது. 760 மைல்கள் நீளமான 11 பில்லியன் டொலர்கள் செலவில் இந்த எரிபொருள் விநியோக குழாய்களை அமைப்பதற்கு 5 வருடங்கள் எடுத்திருந்தன.

Tamil News