சிறீலங்கா அதிகாரிகளை அனைத்துலக நாடுகள் பகிரங்கமாக தடை செய்ய வேண்டும்

சிறீலங்கா அதிகாரிகளை அனைத்துலக நாடுகள்

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அதிபர் கோத்தபாயா ராஜபக்சா, பிரதமர் மகிந்தா ராஜபக்சா மற்றும் முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா உட்பட 18 சிறீலங்கா அதிகாரிகளை அனைத்துலக நாடுகள் வெளிப்படையாக தடை செய்ய வேண்டும் என 9 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.

இது தொடர்பில் கடந்த 26 ஆம் நாள் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையில் காத்திரமான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா சில படை அதிகாரிகள் மீது தடைகளை கொண்டுவந்துள்ளது. அதனை ஏனைய நாடுகளும் பின்பற்ற வேண்டும்.

இலங்கை அரசின் இனப்படுகொலைகளில் இருந்து தப்புவதற்காக ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.