உலகில் மிகவும் ஊழல் நிறைந்த நாடாக மாறிய இலங்கை

ஊழல் நிறைந்த நாடாக மாறிய இலங்கை

ஊழல் நிறைந்த நாடாக மாறிய இலங்கை: உலகில் உள்ள ஊழல் நிறைந்த நாடுகளில் இலங்கை 104 ஆவது இடத்தை எட்டியுள்ளது. கடந்த வருடம் 94 ஆக இருந்த இலங்கை தற்போது மேலும் பின்நோக்கி சென்றுள்ளதாக அனைத்துலக ஊழல் அவதானிப்பு சுட்டெண் அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகில் உள்ள 180 நாடுகளில் இலங்கை 100 இற்கு 37 புள்ளிகளை எடுத்து 104 ஆவது இடத்தை பெற்றுள்ளது.

உலக வங்கி, உலக பொருளாதார அமைப்பு, ஆபத்துக்கள் குறித்த தனியார் ஆலோசனை நிறுவனங்கள் உட்பட 13 நிறுவனங்களின் தரவுகளின் அடிப்படையில் இந்த தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஊழல், இலஞ்சம் கொடுத்தல், பொதுமக்களின் பணங்களை தவறாக பயன்படுத்துதல், ஊழல் தொடர்பான வழக்குகளை சரியாக விசாணை செய்யாமை, சட்டத்தை தவறாக பயன்படுத்துதல், செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள் போன்ற விடயங்கள் இந்த தரப்படுத்துதலில் கருத்தில் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த தர வரிசையில் முன்னணியில் டென்மார்க், பின்லாந்து மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகள் உள்ளன. சோமாலியா, தென்சூடான், சிரியா போன்ற நாடுகள் அதிகம் பின்னிலையில் உள்ளன.

Tamil News