ஆப்கானிஸ்தானுக்கு விமானங்களை மீண்டும் இயக்க இந்தியாவுக்கு தலிபான் கோரிக்கை

இந்தியாவுக்கு தலிபான் கோரிக்கை
ஆப்கானிஸ்தான் இருந்து அமெரிக்கப் படைகள் கடந்த ஓகஸ்ட் மாதம்  முழுமையாக வெளியேறிய பின், தலிபான் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதேவேளை ஆப்கானிஸ்தானுக்கு விமானங்களை மீண்டும் இயக்க இந்தியாவுக்கு தலிபான் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் அங்கு தலிபான் ஆட்சிக்கு பயந்து அந்த நாட்டை சேர்ந்தவர்களும் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல விமான நிலையத்தில் குவிந்தனர்.

இந்நிலையில்,   தீவிரவாதிகள் விமான நிலையத்தைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதில் பல்வேறு நாடுகள் ஆப்கானிஸ்தானுடனான விமானப் போக்குவரத்தை பாதுகாப்புக் காரணங்களுக்காக நிறுத்தின.

 இந்தியா ஓகஸ்ட் 15 ஆம் திகதி முதல் காபூல் நகருக்கான விமான போக்குவரத்தை நிறுத்தியது.  இந்நிலையில், தங்கள் நாட்டுக்கு வர்த்தக ரீதியிலான விமானப் போக்குவரத்தைத் தொடங்கக் கோரி இந்தியா வுக்கு தலிபான் அரசு கடிதம் எழுதியுள்ளது.

அதில், காபூல் விமான நிலையத்தை கடந்த சில நாட்களாக இயக்கி வந்த அமெரிக்கப் படைகள், அதை மீண்டும் பயன்படுத்தமுடியாதபடி சேதப்படுத்திச் சென்றது. ஆனால், கட்டார் நண்பர்கள் விமான நிலையத்தை மீண்டும் இயங்கும் நிலைக்கு கொண்டு வந்துள்ளனர். இதனால், இந்தியா வர்த்தக ரீதியிலான விமானங்களை காபூலுக்கு மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். ஆப்கனின் காம் ஏர், அரியானா ஆப்கன் ஏர்லைன்ஸ் ஆகியன மீண்டும் பயணிகள் விமானத்தை இந்தியாவுக்கு இயக்கவும் விரும்புகிறது என்றும் கூறியுள்ளது.

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021