தாய்லாந்தில் கனமழை-70 ஆயிரம் வீடுகள் நீரில் மூழ்கியதாக தகவல்

355 Views

தாய்லாந்தில் கனமழை

தாய்லாந்தில் கனமழையால் 70 ஆயிரம் வீடுகள் வரை நீரில் மூழ்கியதோடு இதுவரையில் 7 பேர் உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாய்லாந்தில் கனமழையில் இருந்து தப்பிக்க வீட்டு கூரைகளில் தஞ்சமடைந்த மக்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஏறத்தாழ 30 மாகாணங்களை டியான்மு சூறாவளி தாக்கிய நிலையில், வரலாறு காணத அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்து வருவதாக கூறப்படுகின்றது.

தாய்லாந்தின் வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் இதுவரை 7 பேர் வரை உயிரிழந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்களை ரப்பர் படகுகள் கொண்டு மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021

Leave a Reply