ஆப்கான் அரசு அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு: தலிபான் அறிவிப்பு

im 385901 ஆப்கான் அரசு அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு: தலிபான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் பணியாற்றி வந்த அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்குவதாக தலிபான் அமைப்பு அறிவித்துள்ளது.

மேலும், தங்களுடைய ஆளுகை மீது முழு நம்பிக்கை வைத்து பணிகளுக்கு திரும்புமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். “அனைவருக்கும் பொது மன்னிப்பை அறிவிக்கிறோம். எனவே, உங்களுடைய வழக்கமான பணிகளை முழு நம்பிக்கையுடன் தொடருங்கள்,” என்று தலிபான் அறிக்கையை மேற்கோள்காட்டி ஏஃஎப்பி செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆளுகையில் என்ன நடக்குமோ என மக்கள் அஞ்சிய வேளையில் இத்தகைய ஓர் அறிவிப்பு வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ilakku-weekly-epaper-143-august-15-2021