அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன்  போராடி தலிபான்கள் வென்றுள்ளனர், இதில் தவறென்ன? சமாஜ்வாதி கட்சி  எம்.பி கேள்வி

461 Views

741112 shafiqur rahman அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன்  போராடி தலிபான்கள் வென்றுள்ளனர், இதில் தவறென்ன? சமாஜ்வாதி கட்சி  எம்.பி கேள்வி

இந்தியா சுதந்திரம் பெறுவதற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்ததை போல  அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை எதிர்த்து  தலிபான்கள்  போராடி வென்றுள்ளனர், இதில் தவறென்ன என இந்தியாவில் உள்ள சமாஜ்வாதி கட்சி பாராளுமன்ற உறுப்பினரான ஷபிக்குர் ரஹ்மான் பராக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில்,  ஆப்கானில் நடந்த ஆயுதப் போரில்  தலிபான்கள்  வென்றுள்ளதாக ஆப்கான் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

இந்நிலையில், சமாஜ்வாதி கட்சி  பாராளுமன்ற உறுப்பினரான ஷபிக்குர் ரஹ்மான் பராக், தலிபான்களை ஆதரித்து கருத்து தெரிவிக்கையில்,

“ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியா போராடி சுதந்திரம் பெற்றது.  தலிபான்கள் தங்கள் நாடு சுதந்திரமடையவும், அந்நியர்களின் பிடியில் இருந்து விடுபடவும் போராடி வருகின்றனர். இப்போது வென்றுள்ளனர். தங்கள் நாட்டை தாங்களே வழி நடத்த விரும்புகின்றனர். இதில் என்ன தவறு இருக்க முடியும் தலிபான்கள்  ரஷ்யா,  அமெரிக்கா போன்ற வலுவான நாடுகளைக் கூட தங்கள் நாட்டை கைபற்ற அனுமதிக்காத வலிமையான சக்தியாகும்” என்றார்.

ilakku-weekly-epaper-143-august-15-2021

Leave a Reply