மீண்டும் ஒரு வல்லரசின் ஆக்கிரமிப்பை முறியடித்த கைபர் கணவாய் போராளிகள்

238928900 214663297341238 4512396800664032033 n மீண்டும் ஒரு வல்லரசின் ஆக்கிரமிப்பை முறியடித்த கைபர் கணவாய் போராளிகள்

போராட்டமே அவர்களின் வாழ்க்கையாக மாறியிருந்தது! எப்போதிருந்து என்ற கேள்விக்கு , அலக்சாண்டர படையெடுப்பு.

கி மு 234  முதல் என்று கூறிவிடலாம், அன்று அந்த நிலம் தமிழர்களினுடையது, அலக்சாண்டரை அந்த நிலத்தில் மண்கவ்வச் செய்தவர் மாமன்னன் புருசோத்தமர் (புருஸ், போரஸ் ).

2001 இல் உலகப் பெரும் வல்லரசு அமரிக்கா படை எடுக்கமுன் இரண்டு பெரும் வல்லரசுகளான பிரிட்டிஸ் மற்றும் சோவியத் ரசியா வெவ்வேறு காலங்களில் ஆப்கானிஸ்தானை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயன்று படுதோல்வியை தழுவின.

ஆப்கான் கைபர் கணவாய் பாதை உலகில் மிகப் பழமையான போக்குவரத்து வழியாக, மேற்கு உலகையும் கிழக்கு உலகையும் இணைக்கும் மந்திர மலைப்பாதை. அந்த நிலத்து மக்களைத் தவிர அங்கு எவரும் ஆதிக்கம் செலுத்திவிட முடியாத இயற்கை பொறி அமைவு கொண்ட மலை இடுக்குகள் நிறைந்த மர்ம வழிகள்  நிறைந்த எதிரிகளின் சாக்காடு அது.

தாய் நிலத்தை  உரிய மக்களிடம் இருந்து பறித்து நீண்ட நாட்களுக்கு  எவரும் வைத்துக் கொள்ள முடியாது என்பதை ஆப்கான் மக்கள் அடிக்கடி பறை சாற்றுகின்றார்கள்.

ஒரு ஏழை நாடு சிறிய நாடு ஒன்று எப்படி மிகப்பெரிய ஆக்கிரமிப்பை எல்லாம் முறியடித்து சுயகௌரவத்துடன் தலை நிமிர்கின்றது என்பதை அறிந்து கொண்டால் நாமும் அந்த மண்ணில் தோன்றி இருக்கவேண்டும் என்ற எண்ணம் மெதுவாக எழுகின்றது.

238984220 214663320674569 2440616003554698249 n மீண்டும் ஒரு வல்லரசின் ஆக்கிரமிப்பை முறியடித்த கைபர் கணவாய் போராளிகள்

இஸ்லாமிய சட்டங்கள் பெண்களின் மீது கொண்டுள்ள வரைமுறைகள் உலகத்தாரின் கண்களில் உறுத்தலாக இருந்தாலும். ஒரு வகையில் அது அவர்கள் வாழ்வியல், பாரம்பரியம், அதில் பிறநாட்டவர்கள் மூக்கை நுழைப்பது விமர்சிப்பது உன்முதுகில் உள்ள அழுக்கை முதலில் கழுவு என்ற பதில் விமர்சனத்தில் அடிபட்டு போகின்றது.

அந்த நாட்டின் கனிம வளங்களே பல வல்லரசிகளின் கழுகு கண்களுக்கு விருந்தாகின்றன என்பதுதான் ஆணித்தரமான உண்மை. Emeralds எனப்படும் பச்சை வைடூரியம், தங்கம், செம்பு, இரும்பு, இரசாயன கனிமங்கள் என்று பல கனிம வளத்தை நிறைய கொண்ட ஒரு நாடு ஆப்கானிஸ்தான். அந்த வளங்களை வல்லரசுகள் கொள்ளையடிக்கும் தந்திரமே அந்த நிலத்தின் மீதான படையெடுப்புக்கு முக்கிய காரணமாக இருந்தாலும், பயங்கரவாதம் என்ற மேற்கத்திய நாடுகளின் தந்திரத்தில் மூன்றாம் உலக நாடுகளின் சுதந்திரம், தற்சார்பு பொருளாதாரம், சமூக பாதுகாப்பு போன்ற பல வாழ்வியல் உரிமைகள் பறிக்கப்படுகின்றன, அதற்கு உதாரணமே இந்த கைபர் நில ஆப்கான் வரலாறு.

1947 பிரிட்டனின் பிடியில் இருந்து விடுபட்டு 1970ல் சோவியத்திடம் சிக்கிக் கொண்டது, 1979ல் சோவியத்திடம் இருந்து விடுபட்டு 2001ல் அமெரிக்காவிடம் மாட்டிக் கொண்டது ஆப்கானிஸ்தான்.

தலிபான் போராளிகள் மீது உலக ஊதுகுழல்கள் பல்வேறு விமர்சனங்களை அள்ளி எறிந்து சேறு பூசிக்கொண்டே இருந்தார்கள். அதே வேளை அங்கு உள்ள உண்மை நிலையை அந்த கைபர் கணவாய்ப் போராளிகளால் தெளிவாக சொல்ல முடியாது இருந்தார்கள். அவர்களின் நிலத்தை ஆக்கிரமிக்கும் உரிமை எவருக்கும் இல்லை. போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து எந்த கொம்பனும் அந்த மண்ணின் மைந்தர்களை நிரந்தர அடிமையாக்கிவிட முடியாது என்பதை தலிபான்கள் நிறுவி உள்ளார்கள்

14 மொழிபிரிவுகள் கொண்ட மக்கள் வாழும் ஒருநாட்டில் அவர்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை அவர்கள் தீர்ப்பதில் ஏற்ப்பட்ட சிக்கல்கள்தான் அன்னியர்கள் பஞ்சாயத்தில் ஆக்கிரமிப்புக்குள் வீழ்ந்து வருகின்றது. ஆப்கானில் உஸ்பெகிஸ், டஜிகிஸ், பஸ்டுன்ஸ் என்ற மூன்று பிரிவு மக்கள் பெரும்பான்மையாகவும், எனைய ஏறக்குறைய பத்துக்கும் மேற்பட்ட சீனர்கள் மொங்கோலியர்கள், சியோனியர்கள், நமதமினர்கள் என்று சில பிராந்திய பெரும்பான்மை மக்களும் கூடி வாழும் ஒரு நாடாக ஆப்கானிஸ்தான் உள்ளது. இதில் முக்கியமாக பஸ்டூன்ஸ் மக்களின் பூர்வீக நிலத்தின் ஒரு பகுதி பாக்கிஸ்தானுக்குள்ளும் மறு பகுதி ஆப்கானிஸ்தானுக்குள்ளும் சிக்கிக் கொண்டது.  ஆனாலும் பஸ்துன் மக்களுக்கு எல்லைகளை ஏற்கும் மனதிலை இன்றுவரை எழவில்லை, அவர்கள் நிலத்தை இரண்டாக உடைத்து இரண்டு நாடுகளின் நிர்வாகத்தில் இட்டது யார் தவறு? பஸ்துன் மக்களே தலிபான்கள் அவர்கள் நியாயங்களை அடுக்கி கொண்டே போகலாம்

அதில் மிகப்பெரிய சிக்கல் ஒன்று உள்ளது !

பஸ்டூன் மக்கள் ஆப்கானிஸ்தானின் சனத்தொகையில் அரைப்பங்கினர், அதுமட்டுமன்றி மொத்த பஸ்டூன் மக்களில் மூன்றில் இரண்டு பங்கு பஸ்டூன் மக்கள் பாக்கிஸ்தானிலும் இரண்டு நாடுகளின் எல்லையில் வாழ்கின்றார்கள். ஒரு இனத்தின் நிலத்தை இரண்டு நாடாக கூறுபோட்டு ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் என்று உலக நாடுகள் அங்கிகரித்ததை ஏற்க முடியுமா, கிழக்கு ஜெர்மனி, மேற்கு ஜெர்மணி இணைந்ததை யாரும் தடுக்கவில்லை பஸ்டூன் மக்களின் இணப்பை தடுப்பதில் இந்த நாடுகள் போடும் நாடகமே தலிபான்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பது

என் வீட்டில் நீ யாருடா நாட்டாமை இந்த கட்டுரை மிக நீளமானது படிப்பவர்கள் விமர்சனத்துடன் அடுத்த பகுதியை தருகின்றேன்

மணிவண்ணன் ஏகாம்பரம்

ilakku-weekly-epaper-143-august-15-2021