எண்ணெய் இறக்குமதி நெருக்கடியைப் போக்க சீனாவின் உதவியை நாடும் இலங்கை

357 Views

நெருக்கடியைப் போக்க சீனாவின் உதவி


சீனாவிடமிருந்து எண்ணெயை கொள்வனவு செய்வதற்கான முயற்சிகளில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது. எண்ணெய் இறக்குமதி நெருக்கடியைப் போக்க சீனாவின் உதவியை இலங்கை நாடியுள்ளது என அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

இலங்கை எண்ணெய் இறக்குமதிக்கு அவசியமான நிதியை பெற்றுக்கொள்வதில் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளதால் ஆறுமாதகாலத்திற்கு சீனாவிடமிருந்து எண்ணெயை பெற்றுக்கொள்வதற்காக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக  அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சீனா தூதுவர் ஊடாக இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை எண்ணெய் கொள்வனவிற்கான ஓமானிடமிருந்து 3.6 பில்லியன் டொலர்களை கடனாக பெறுவதற்கான முயற்சிகளிலும் இலங்கை ஈடுபட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ilakku-weekly-epaper-150-october-03-2021

Leave a Reply