இந்திய – இலங்கை கூட்டு இராணுவப் பயிற்சி இன்று அம்பாறையில் ஆரம்பம்

இந்திய – இலங்கை கூட்டு இராணுவப் பயிற்சி

இந்திய – இலங்கை கூட்டு இராணுவப் பயிற்சி இன்று அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பமாகவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘மித்ர சக்தி’ என இந்த கூட்டுப் பயிற்சிக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து 12 நாட்களுக்கு பயிற்சி இடம்பெறவுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றன.

இதில் கலந்துகொள்ளவுள்ள இந்திய இராணுவத்தினர் 120 பேரை ஏற்றிய விசேட விமானம், மத்தளை சர்வதேச விமான நிலையத்தை நேற்று முன்தினம் வந்தடைந்துள்ளது.

கேர்ணல் பிரகாஷ் குமாரின் தலைமையில் இந்திய இராணுவம் இந்த பயிற்சியில் கலந்துகொள்ளவுள்ளது.

53 ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே, இந்த பயிற்சியின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை இராணுவத்தின் விஜயபாஹூ படையணியுடன் அம்பாறை போர்ப்பயிற்சி பாடசாலையில் இந்த பயிற்சி இடம்பெறவுள்ளது.

COVID ஒழிப்பு சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, Bio-Bubble முறைமையில் இந்த பயிற்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இலக்கு மின்னிதழ் 150 அக்டோபர் 03 2021 | Weekly Epaper
ilakku-weekly-epaper-150-october-03-2021