வடகொரியாவில் வெள்ளத்தால் கடும் உணவுப் பஞ்சம்-நிவாரணப் பணிகளை மேற்கொள்ள இராணுவத்துக்கு உத்தரவு

2021 07 30T003940Z 1993021109 RC2NUO90XLM2 RTRMADP 3 NORTHKOREA POLITICS வடகொரியாவில் வெள்ளத்தால் கடும் உணவுப் பஞ்சம்-நிவாரணப் பணிகளை மேற்கொள்ள இராணுவத்துக்கு உத்தரவு

வடகொரியாவில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு இராணுவத்துக்கு அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் அழைப்பு விடுத்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை வெள்ளத்துக்குப் பின் 1,000 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்து   சுமார் 5,000 பேர் வெளியேற்றப்பட்டனர் என்று அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி கூறியுள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் நாட்டில் உணவு தொடர்பாக “பதற்றமான” சூழல் ஏற்பட்டதாக கிம் ஜோங் உன் கூறியிருந்தார்.

கடந்த ஆண்டு ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக வடகொரியாவில் தானிய உற்பத்தி இலக்குகள் தவறிப்போயின. அதனால் இந்த ஆண்டு அறுவடையை நாடு நம்பியிருந்தது.

இந்நிலையில், கன மழை காரணமாக நூற்றுக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்கள் நீரில் முழ்கியிருப்பதாக ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவிக்கிறது.

அணு ஆயுதச் சோதனைகளின் காரணமாக சர்வதேச அளவில் வடகொரியா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த தனது எல்லைகளை வடகொரியா மூடியுள்ளது. உணவு, உரம் மற்றும் எரிபொருள்களுக்கு சீனாவை மட்டுமே வடகொரியா நம்பியிருக்கிறது. தற்போது எல்லைகள் மூடியிருப்பதால் இந்தச் சரக்குப் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டிருக்கிறது.

1990களில் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு வடகொரியா நாடு தழுவிய பஞ்சத்தால் பாதிக்கப்பட்டது. அந்த நேரத்தில் பட்டினியால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 30 இலட்சம் வரை இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.

ilakku-weekly-epaper-141-august-01-2021