அவுஸ்திரேலிய குடியுரிமை பெறுவோரில் ஐந்தாவது ஆண்டாக இந்தியர்கள் முதலிடம்

223839204 1388802971492107 4466132214875638798 n அவுஸ்திரேலிய குடியுரிமை பெறுவோரில் ஐந்தாவது ஆண்டாக இந்தியர்கள் முதலிடம்

அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சின் தரவுகளின்படி, கடந்த 2020 ஜுலை முதல் 2021 ஜுன் வரையான காலப் பகுதியில், புலம் பெயர் பின்னணி கொண்ட 138,646 பேர் அவுஸ்திரேலிய குடியுரிமை பெற்றிருக்கின்றனர்.

இவர்களில் 24,076 பேர் இந்தியர்கள் ஆவர். இரண்டாமிடத்தில் 17,316 என்ற எண்ணிக்கையுடன் பிரிட்டிஷ் பின்னணி கொண்டோர் உள்ளனர்.

இதைத் தவிர பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 8,659 பேர், சீனாவைச் சேர்ந்த 7,302 பேர், நியூசிலாந்தைச் சேர்ந்த 5,612 பேர், பாகிஸ்தானைச் சேர்ந்த 5,415 பேரும், அவுஸ்திரேலிய குடியுரிமை பெற்றுள்ளனர்.

ilakku-weekly-epaper-141-august-01-2021