“ஈரானின் புதிய முன்மொழிவில் ட்ரம்புக்கு திருப்தி இல்லை”

ஈரான் உடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அந்நாடு அனுப்பிய புதிய முன்மொழிவு அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு திருப்திகரமாக இல்லை என செய்தி வெளியாகியுள்ளது.

அந்த முன்மொழிவில் ஈரானின் அணுசக்தி திட்டம் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை என்பதே  ட்ரம்பின் அதிருப்திக்குக் காரணம் என, அதிகாரிகளை மேற்கோள்காட்டி ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, இந்த முன்மொழிவு பற்றி  ட்ரம்ப் தனது மூத்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்து வருவதாக, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் காரலின் லெவிட் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஈரானுக்கு ஆதரவு பெறும் நோக்கில் கடந்த இரண்டு நாட்களில் பாகிஸ்தான், ஓமன் மற்றும் ரஷாவுக்குச் சென்றுள்ளார்.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்த இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெறாத நிலையில், ஈரான் தனது முன்மொழிவை போன் மூலம் அனுப்பலாம் என ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.