எழுவர் விடுதலை- ஓராண்டாகியும் நடவடிக்கை இல்லை – பேரறிவாளனின் தாயார் வேதனை

106 Views

எழுவர் விடுதலை

எழுவர் விடுதலை: விடுதலை செய்யக்கோரி கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் அன்று பேரறிவாளன் தாக்கல் செய்த மனு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு ஓராண்டு கடந்துள்ளதாகத் தெரிவித்த பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள்,“இந்தக் காத்திருப்பு கவலையை,மன அழுத்தத்தை தருகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் இந்தியப் பிரதமர் கொலை வழக்கில் தண்டனை வழங்கப்பட்டு கடந்த 29 வருடங்களாக சிறையில் இருந்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுவரை விடுதலை செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், கடந்த 30-23-2015ம் ஆண்டு பேரறிவாளன் தாக்கல் செய்திருந்த மனுவில், தன்னை விடுவிக்கக் கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையில், கடந்த செப்டெம்பர் 6ம் திகதி அன்று உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம், இது குறித்து தமிழக ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என கூறியிருந்தது.

இந்நிலையில், அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஓராண்டாகியும் ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளது குறித்து பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் #29 Years TooMuchGovernor என்ற ஹாஸ்ட்டாக்கைப் பயன்படுத்தி ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021

Leave a Reply