அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதை அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும்-ICJ

அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும்

அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும்: கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியை அரசாங்கம் கையாளும் முறை தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்தமைக்காக அரச அதிகாரிகள், வைத்திய நிபுணர்கள் மற்றும் சமூக வலைத்தள செயற்பாட்டாளர்களுக்கு எதிராக அடக்கு முறைகளைப் பிரயோகிப்பதையும் அவர்களை அச்சுறுத்து வதையும் அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சர்வதேச யூரர்கள் ஆணைக்குழு (International Commission of Jurists) வலியுறுத்தி யுள்ளது.

இதுகுறித்து சர்வதேச யூரர்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

‘கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டை அரசு கையாளும் முறை தொடர்பில் தகவல்களை அறிந்து கொள்வதற்கான உரிமை, கருத்துக்களை வெளிப்படுத்து வதற்கான சுதந்திரம் மற்றும் தர்க்கங்களில் ஈடுபடுவதற்கான இடைவெளி ஆகியவை பாதுகாக்கப்படுவது அவசியமாகும்’ என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தெரிவித்திருக்கின்றது.

தொற்று நோய்ப் பரவலுக்கு மத்தியில் பொது மக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமெனின், தவறான தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுப்பதற்கு சட்டரீதியான ரீதியான நடைமுறையொன்று காணப்பட வேண்டும்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகளை ஓர் காரணமாகக் கூறி இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அடக்கு முறைகள் செயற்பாடுகள், சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக தகவல் அறியும் சுதந்திரம் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான அதன் கடப்பாடுகளை மீறுவதாகவே அமையும்.

அதுமாத்திரமன்றி சுகாதாரத்துடன் தொடர்புடைய தகவல்களை அறிந்து கொள்வதற்கான பொதுமக்களின் உரிமையிலும் இடையூறை ஏற்படுத்தும்” என்று  குறிப்பிடப்பட்டுள்ளது.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021