கினி நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றியதாக  இராணுவம் அறிவிப்பு – அமெரிக்கா, ஐ.நா கண்டனம்

கினி அதிகாரத்தை கைப்பற்றியது இராணுவம்

இராணுவம் அறிவிப்பு: மேற்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் கினி (Guinea) நாட்டின் இராணுவத்தினர் அந்நாட்டு தேசிய தொலைக்காட்சியில் தோன்றி, அரசைக் கலைத்துவிட்டதாக அறிவித்துள்ளமைக்கு ஐ.நா கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அதிபர் ஆல்ஃபா காண்டேவுக்கு என்ன ஆனது என்று தெளிவாகத் தெரியவில்லை என்றும் ஒரு உறுதிப்படுத்தப்படாத காணொளியில், அதிபரை இராணுவத்தினர் சூழ்ந்திருப்பது போலக் காட்டப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ கூட்டரெஷ் மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியம், இராணுவத்தின் இந்த ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையை கண்டித்துள்ளதோடு   அதிபர் ஆல்ஃபா காண்டோவை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

கினி இயற்கை வளம் நிறைந்த நாடு, இருப்பினும் பல ஆண்டுகளாக தொடர்ந்து நிலவும் ஒரு அமைதியற்ற சூழல் மற்றும் மோசமான நிர்வாகம் காரணமாக உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021