காபூல் தாக்குதல்: நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் கடும் கண்டனம்

167 Views

afdf61d6 debb 4899 b567 dcd495dadd88 காபூல் தாக்குதல்: நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் கடும் கண்டனம்

காபூல் தாக்குதல்:  காபூலில் இன்று மாலையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் ஜெனரல் யென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காபூல் நகரில் இன்று மாலையில் நடத்தப்பட்ட இரண்டு தாக்குதல்களில் ஒன்று அப்பி வாயில் பகுதியிலும் மற்றொன்று அந்த வாயில் பகுதியில் இருந்து சில அடி தூரத்தில் இருக்கும் பேரன் விடுதி அருகேயும் நடத்தப்பட்டுள்ளது.

அடுத்த தலைமுறையால் வழிநடத்தப்பட்ட தலிபான்களின் படை நடவடிக்கை – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

காபூல் விமான நிலைய பகுதியில் ஒன்று கூடுவதை தவிர்க்குமாறு தமது குடிமக்களுக்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அரசுகள் எச்சரிக்கை அறிவுறுத்தல் விடுத்த நாளில் இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன.

இந்த சம்பவத்தில் இதுவரையில் 13 பேர் பலியாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “காபூல் விமான நிலையத்துக்கு வெளியே நடந்த தாக்குதலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். பாதிக்கப் பட்டவர்கள் மற்றும் அவர்களின் நேசமிக்க உறவுகளுடன் எனது சிந்தனை இருக்கிறது. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக அங்கு எத்தனை பேரை வெளியேற்ற முடியும் என்பதில்   மட்டுமே எங்களுடைய கவனம் இருக்கும்,” என்று  பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், காபூல் நகரில் இன்று மாலையில் நடத்தப்பட்ட இரண்டு தாக்குதல்களில் 52 பேர் காயம் அடைந்திருப்பதாகவும், பலர் பலியாகி யிருப்பதாகவும் தலிபான் செய்தித்தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு உள்ளூர் தொலைக் காட்சி ஒன்று கூறியுள்ளது.

அதே நேரம்,  ஆப்கானிஸ்தான் வான் பரப்பில் 25 ஆயிரம் அடி உயரத்துக்கு கீழே கட்டாயமாக பறக்கக் கூடாது என்று தமது நாட்டில் இயங்கி வரும் விமான நிறுவனங்களுக்கு பிரிட்டன் அரசு உத்தர விட்டிருக்கிறது.

ilakku-weekly-epaper-144-august-22-2021

Leave a Reply