தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் 11 பேர் பலி: ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்துக்கு வெளியே நடந்த தாக்குதலில் குறைந்த பட்சம் 11 பேர் பலியாகி யிருக்கலாம் என்று தலிபான் தெரிவித்துள்ளது. சில வெளிநாட்டினர், பெண்கள், குழந்தைகள், தலிபான் போராளிகள் சிலர் காயம் அடைந்துள்ளதாக தலிபான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்துக்கு வெளியே பயங்கர வெடிச்சத்தம் கேட்டதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான பென்டகன் தெரிவித்துள்ளது. அது தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் என தெரிய வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த தலைமுறையால் வழிநடத்தப்பட்ட தலிபான்களின் படை நடவடிக்கை – வேல்ஸ் இல் இருந்து அருஸ்
இந்நிலையில், காபூல் விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நேட்டோ படையில் அங்கம் வகிக்கும் பிரிட்டிஷ் துருப்புகளுக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை என்று பிரிட்டன் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
காபூல் ஹமீத் கர்ஸாய் சர்வதேச நிலையத்தின் வாயில் பகுதியில் பிரிட்டிஷ் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதே சமயம், அமெரிக்க பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Update: Several people wounded in the blast close to Kabul airport have been taken to Emergency Hospital. #Afghanistan pic.twitter.com/qjdI4o7aGF
— TOLOnews (@TOLOnews) August 26, 2021
அத்துடன் இந்த குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்த போது காயம் அடைந்தவர்களை உள்ளூர் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக உள்ளூர் தொலைக்காட்சியான டோலோ நியூஸ் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை நடத்தியது யார் என்ற விவரம் இன்னும் உறுதிப்படுத்தப்பட வில்லை.