தமிழக சட்டசபையின் அதிகாரமற்ற தன்மை – ஈழத்தமிழர்களுக்காக போராட முடியாத நிலையை ஏற்படுத்தியது – பகுதி 1

651 Views

தமிழக சட்டசபையின் அதிகாரமற்ற தன்மை - ஈழத்தமிழர்களுக்காக போராட முடியாத நிலையை ஏற்படுத்தியது

மின்னிதழ் உள்ளடக்கம்

பகுதி 1

தமிழக சட்டசபையின் அதிகாரமற்ற தன்மை - ஈழத்தமிழர்களுக்காக போராட முடியாத நிலையை ஏற்படுத்தியதுதமிழக சட்டசபையும் ஈழத் தமிழர்களும்  பற்றி ஓய்வு பெற்ற சென்னைப் பல்கலைக்கழக அரசியல் மற்றும் பொது நிர்வாகத்துறைத் தலைவர் பேராசிரியர் இராமு. மணிவண்ணன் அவர்கள் இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய  நேர்காணல்

தமிழக சட்டசபையின் அதிகாரமற்ற தன்மை

கேள்வி?

தமிழக சட்டசபையின் வளர்ச்சிக் கட்டங்களையும், அவற்றின் முக்கியத் துவங்களையும் பற்றிக் கூறுங்கள்?

பதில்!

தமிழக சட்டசபையின் வளர்ச்சிக் கட்டங்கள் என்று சொல்லும் போது, இந்தியா காலனிய ஆதிக்கத்திற்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் சுதந்திர இந்தியாவாகத் திரும்புவதற்கு 1945ஆம் ஆண்டு சட்டத்தின்படி (Government of india at 1945) 1946 ஆம் ஆண்டு மாகாணத் தேர்தல்கள் நடத்தப் படுகின்றது. இந்த மாகாண மட்டத் தேர்தல்களில் சென்னை மாகாணத்தில் (State of Madras)  காங்கிரஸ் கட்சி பெருவாரியான வாக்குகளையும், தொகுதிகளையும் வென்று ஆட்சி அமைக்கின்றது. இது சுதந்திர இந்தியாவின் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு அடித்தளமாகவும், சுதந்திர இந்தியாவின் சென்னை மாகாணத்தின் ஆட்சிப் பிரதிநிதியாகவும் பார்க்கப்பட்ட காலம்.

முதலில் ராஜாஜி அவர்களும், பின்னர் ஓமந்தூரார் அவர்களும், ஆட்சியில் இருந்தார்கள். மொழி வாரியாக மாகாணங்கள் பிரிக்கப்பட்டு, 1967ஆம் ஆண்டிற்கு பின்னர் தான் – திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்ற பிறகு   State of Madras என்று அழைக்கப்பட்ட சென்னை மாகாணமானது, தமிழ்நாடு என்று அழைக்கப்பட்டது.

இன்றைய தமிழகத்தின் பூகோளம், தமிழ்க் கலாச்சாரம், அரசியல் இவற்றைக் கலந்து தான் பார்க்க வேண்டும். தமிழ் பேசப்பட்ட பகுதிகளும், தமிழ் இப்போதும் பேசப்படுகின்ற பகுதிகளும் மொழி வாரியாக மாகாணங்கள் கொடுக்கப்பட்ட போது, தமிழ் பேசும் பகுதிகள்கூட அண்டை மாநிலங்களுக்குள், ஏதோவொரு அரசியல் காரணங்களினால் சேர்க்கப்பட்டு விட்டது.

தமிழக சட்டசபையின் அதிகாரமற்ற தன்மை - ஈழத்தமிழர்களுக்காக போராட முடியாத நிலையை ஏற்படுத்தியது
சி. அண்ணாத்துரை

மாநிலங்களில் நிறைய தவறுகளும், பிழைகளும் நடத்தப்பட்டது. State of Madras என்பது தான் தற்போது தமிழ்நாடு என்று அழைக்கப்படுகிறது. தமிழக சட்டசபையின் வரலாறும், தமிழ் நாட்டின் வரலாறும், அதேபோல் சென்னை மாகாணத்திலிருந்து தமிழ்நாடு உருவானதும், காலனிய ஆக்கத்திலிருந்து சுதந்திர இந்தியா வந்ததும் தொடர்பாக நீண்ட வரலாறு ஒன்று இருக்கிறது. சட்டசபையை நோக்கித் தான் இந்த வரலாற்றை நாம் பேசுகின்றோம்.

தமிழக சட்டசபை வரலாற்றில் தலைவர்கள் என்று சொல்லும் போது மொழி ரீதியாக பிரிக்கப்பட்ட போது காமராஜர் தலைமையிலும், தமிழ்நாடு மாநிலம் என்னும் போது, சி. அண்ணாத்துரை அவர்களின் வரலாறும் இருக்கின்றது.

கேள்வி?

தமிழக சட்டசபை தோற்றுவித்த ஆளுமைகள் குறித்து சுருக்கமாகக் கூறவும்?

பதில்!

தமிழக சட்டசபையின் அதிகாரமற்ற தன்மை - ஈழத்தமிழர்களுக்காக போராட முடியாத நிலையை ஏற்படுத்தியதுஇந்திய அரசாங்க சட்டவிதிப்படி 1919, 1945 பின்னர் இந்திய விடுதலை, சென்னை மாகாண ரீதியாக பார்க்கும் போது, சென்னை மாகாண சட்டசபை இருந்தது. சென்னை மாகாணத்தின் Governor General ஆக இருந்து, சென்னை மாகாணத்தின் முதல் பிரதம மந்திரியாகவும், முதலமைச்சராகவும் பதவி யேற்ற இராஜகோபால ஆச்சரியார், பின்னர் ஓமந்தூரார், காமராஜர், பக்தவச்சலம், சி.என்.அண்ணாத்துரை அதன் பின்னர் கலைஞர் கருணாநிதி, இடைப்பட்ட காலத்தில் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் முதல்மந்திரியாக இருந்ததும். எம்.ஜி.ஆர். என அழைக்கப்படும் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் முதல்வராக இருந்ததும் சுதந்திர இந்தியாவின் ஐம்பது ஆண்டுகளில் 1947இலிருந்து 1990 வரை சட்டசபை வரலாறு தான்.

கேள்வி?

நவீன வரலாற்றில் அதிகளவு தமிழ் மக்களைக் கொண்ட சட்டசபை தமிழ் நாட்டில் உள்ளது. அந்த வகையில் ஈழத்தமிழர் பிரச்சினையை காலங் காலமாக சட்டசபை அணுகிய முறைகள் பற்றி கூறுங்கள்?

பதில்!

இன்றைக்கும் உலகத்தில் தமிழ்நாடு தான் தாய்த் தமிழகம். தமிழர்களுக்கு இது தாய்மண். இந்த சட்டசபை தமிழர்களின் ஆளுமை, ஜனநாயகத்தைப் பிரதி பலிக்கின்ற ஒரு அவை.  இதன் போது இரண்டு காலகட்டங்களைப் பார்க்கலாம். ஈழ விடுதலைப் போராட்டம், ஈழ மக்களின் உரிமைப் போராட்டம் எவ்வாறு பிரதிபலிக்கப் பட்டதோ அதன் உணர்வுகளைப் பிரதிபலிப் பதாகவே தான்  தமிழக சட்டசபையின் முன்னெடுப்புகளும் சரித்திரத்தில் நிகழ்ந்து கொண்டிருந்தது.

அதற்கு இரண்டு உதாரணங்களைச் சொல்லலாம். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் – இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு குடியுரிமை பறிக்கப்பட்ட போது, இங்கு மக்கள் வெகுண்டு எழுந்தார்கள். அப்போது சட்ட ரீதியாகவும், அந்நிய நாட்டுடன் தலையிடுவதற்குமான ஒரு அதிகாரம் இல்லாமல் போனது ஒரு சரித்திர உண்மை. ஆனால் தமிழக மக்களுக்கும், தமிழக தலைவர்களுக்கும், தமிழக அரசியல் கட்சிகளுக்கும் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு நடந்த மிகப்பெரிய ஒரு அநீதிக்காக எதையுமே செய்ய முடியாது போனது, அந்த அதிகாரம் அற்ற தன்மையைப் பிரதிபலிக்கின்றது.

அந்த நேரத்தில் பெரியாரின் கருத்தை நாம் எடுத்துச் சொல்ல வேண்டும். அந்த மக்களுக்கு உதவி செய்யக் கூடாது என்று அவர் சொல்வில்லை. அவர்களுக்கு எம்மால் என்ன செய்ய முடியும் என்பதையும், முடியாது என்பதையும் தெள்ளத்தெளிவான உணர்வுடன்தான் பேசியிருந்தார். நமக்கே இங்கே அதிகாரங்களும், முழு உரிமைகளும் குறைவாக இருக்கும் போது, நாம் எவ்வாறு தலையிட முடியும் என்று சொன்னார். இப்போதும் அநேக இடங்களில் பெரியாரின் இந்தக் கருத்து பதிவு பிரதிபலிக்கப் படுகின்றது.

இரண்டாவது 1956இல் சிங்களம் திணிக்கப்பட்ட போது, நாமும் இங்கு இந்தி மொழித் திணிப்பிற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கின்றோம். இந்தப் போராட்டத்தை இரண்டு விதமாகப் பார்க்க வேண்டும். நாம் ஈழத் தமிழர்களுக்கு என்ன பேசினோம் என்பதும், நமக்கு இந்தியாவில் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதையும் பேச வேண்டும். இந்தியா ஒரு புதிய ஜனநாயக கட்டமைப்பில் நுழைந்து கொண்டிருந்த காலம் அது. இந்த வெளியில் நாம் எவ்வாறு ஈழத் தமிழர்களுக்கு  தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருந்தோம்.

அங்கு ஈழத்தமிழர்கள் சிங்களத் திணிப்பை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக் கிறார்கள். நீண்ட வரலாறு நமக்கும் இருக்கின்றது. இங்கு நாம் இந்தித் திணிப்பிற்கு எதிராக 1940 இலிருந்து 1970 வரை போராடிக் கொண்டிருந்தோம். நமக்கு இந்திய அரசியல் சட்டங்களின்படி ஒருமாற்றம் வந்தது. அங்கு இலங்கையில் 1956இல்நடந்த மொழித் திணிப்பிற்கும், 1974களில் கல்வி ரீதியாக மக்கள் ஒடுக்கப்பட்ட போதும் அவர்களுக்கு இந்தியாவில், குறிப்பாக தமிழகத்திலிருந்து நிறையக் குரல்கள் எழுப்பப்பட்டன. தலைவர்கள், கட்சித் தலைவர்கள் போன்ற அனைவருமே குரல் கொடுத்தார்கள். அவர்கள் குரல் கொடுக்கவில்லை என்று சொல்லவே முடியாது.

தமிழக சட்டசபையின் அதிகாரமற்ற தன்மை - ஈழத்தமிழர்களுக்காக போராட முடியாத நிலையை ஏற்படுத்தியது1980களில் இருந்து 1990 வரை தமிழகமும், ஈழப் போராட்டமும்,  பிரிக்க முடியாத ஒன்றோடு ஒன்று நிழலாக உறவாடிய காலம். 1990இற்கு பின்னர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னர் இந்த ஒருங்கிணைந்த உறவில் ஒரு விரிசல் உருவானது. மீண்டும் 2009இற்குப் பின்னர் ஈழப் போராட்டம் இன்றைக்கும் தமிழகத்தில் அதே உச்சத்தைத்தான் கொண்டிருக்கிறது. தமிழகத்திலுள்ள தமிழ் மக்களுக்கு உணர்வு கிடையாது. அரசியல்வாதிகளுக்கு, தங்கள் அரசியல் சூழலைப் பற்றித்தான் கவனம் என்று கூறுவதுகூட  உண்மை கிடையாது. தொப்புள்கொடி உறவு என்பது ஒரு எதேச்சையான வார்த்தை கிடையாது. அரசியல் ரீதியாக நமக்கும், ஈழத்திற்கும் இருக்கின்ற  ஒரு ஆழமான பதிவாகும்.

கேள்வி?

திராவிட கழக  சட்டசபை ஆட்சியின் எழுச்சிகளின் பின்னணியில் ஈழத்தில் சிங்களவர்கள் தமிழர் மேல் தாக்குதல்களை ஆரம்பித்தனர் என்ற விமர்சனங்கள் உண்டு

பதில்!

திராவிடக் கட்சிகள் அங்கீகரிக்காமல் தமிழகத்தில் ஈழப் போராட்டம் எவ்வாறு நடந்து கொண்டிருக்கும்? 1962இற்குப் பிறகு தமிழக அரசியலில் திராவிடக் கட்சிகளின் எழுச்சி உருவாகின்றது. இலங்கை அரசியலில் 1948இலே தேயிலைத் தோட்ட தமிழ் மக்களின் குடியுரிமை பறிக்கப்படுகின்றது. இதற்குக் காரணமாகக் கூறப்பட்டது, தோட்டத் தொழிலாளர்களும் – வம்சாவளித் தமிழர்களும், பூர்வீகத் தமிழர்களும் சனத் தொகை எண்ணிக்கையில் அதிகரித்து விட்டால், இலங்கை அரசியலில் சிங்களவர் களின் அதிகாரம் பலவீனமாகிப் போகும் என்பதாகும்.

இந்திய வம்சாவளித் தமிழர்கள்

நீண்ட தொலை நோக்குப் பார்வையாகவே இந்தக் குடியுரிமை பறிப்பு என்பது மேற்கொள்ளப்பட்டது. இந்தக் குற்றம் ஈழத்தமிழர் மீதே உள்ளது. இந்திய இந்திய வம்சாவளித் தமிழர்கள் குடியுரிமை பறிக்கப்பட்ட போது, ஈழத் தமிழர்கள் ஒன்றிணைந்து நீண்டதொரு போராட்டத்தை நடத்தியிருந்தால்,  1950களில், 1960களில் அவர்களுடைய உரிமைக்காகப் போராடும் போது இந்திய வம்சாவளித் தமிழர்களும் ஒருங்கிணைந்த குடிமக்களாகப் போராடியிருக்க முடியும்.

1948இல் இந்திய வம்சாவளித் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்ட போதும், 1956இல் சிங்களத் தனிச்சட்டம் என்று பேசப்படுகின்ற சட்டம் வரும் போதும், 1960களில் எழுச்சி எனப் பார்க்கும் போதும், எவ்வாறு இவை அனைத்தையும் ஒன்றாகப் பார்க்க முடியும். இந்தப் பிணைப்பில் மிகப்பெரியதொரு அரசியல் சரித்திரப் பிழை இருக்கின்றது.

இந்திய அரசியல் சாசனத்தின்படி நாங்கள் மிகப் பெரியதொரு போராட்டங்களை நடத்த முடிந்தது. இந்தியாவில் பல குறைபாடுகள் இன்றைக்கும் இருந்தாலும், இந்தியா பன்முகத் தன்மை கொண்ட ஒரு நாடு. இதனால் இங்கு போராடக்கூடிய சூழ்நிலை வருகின்றது.  ஒற்றை இனம், ஒற்றை மொழி, ஒற்றைக் கலாச்சாரம், ஒற்றை மதம் எனப் பார்க்கப்படுகின்ற இலங்கையில் தமிழர்கள் போராட வேண்டிய சூழலும், அரசியல் காரணங்களும் வேறு.

எனவே இரண்டையும் இணைத்து, தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் தலை யோங்கியதால், அவர்களின் எழுச்சியினால் அங்கு தமிழ் மக்கள் ஒடுக்கப் பட்டார்கள் என்பது சரித்திர பூர்வமாகவும், அரசியல் ரீதியாகவும்கூட ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

தொடரும்….

Leave a Reply