லொஸ் ஏஞ்சல் காட்டுத் தீ: இதுவரை 24 பேர் பலி

லொஸ் ஏஞ்சல் காட்டுத் தீயால் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. பலரை காணவில்லை என்றும் கூறப்படுகின்றது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் – லொஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பாலிசேட்ஸ் பகுதியில் கடந்த 7-ம் திகதி காட்டுத் தீ ஏற்பட்டது. இந்த காட்டுத் தீ   50,000 ஏக்கர் அளவுக்கு  பரவி உள்ளது. இதில் சுமார் 40,000 ஏக்கர் பரப்பளவு முழுமையாக தீயில் எரிந்திருக்கிறது.  மேலும் தீயை அணைக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். பலரை காணவில்லை. ஏராளமானோர் தீக்காயம் அடைந்துள்ளனர். சுமார் 4 இலட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.