திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்குள் சேவையாற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் திங்கட்கிழமை (03) பிக்மீ செயலியின் கட்டண முரண்பாடுகள் மற்றும் சேவை தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அலஸ்தோட்டம் சந்தியில் இருந்து பேரணியாக புறப்பட்ட சாரதிகள், மூன்றாம் கட்டை வழியாக பிக்மீ அலுவலகத்தை அடைந்து தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.
சாரதிகளின் குற்றச்சாட்டின்படி, திருகோணமலை சாரதிகளுக்கு குறைந்த கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுவதால் வருமான இழப்பு ஏற்படுவதாகவும், உதாரணமாக திருக்கோணமலையில் இருந்து சிகிரியா செல்ல ரூ.9,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிரியாவில் இருந்து திருகோணமலை வர ரூ.12,000 கட்டணம் அறவிடப்படுவதாகவும் தெரிவித்தனர்.
இந்தக் கவனயீர்ப்பில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை தவிசாளர் வெள்ளத்தம்பி சுரேஷ்குமார் கலந்துகொண்டு பிக்மீ நிறுவன பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். 14 நாட்களுக்குள் உரிய தீர்வை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.



