முரண்பாடுகளுக்கு மத்தியில் கடிதங்களை பரிமாறிக் கொண்ட கொரிய அதிபர்கள்

கடிதங்களை பரிமாறிக் கொண்ட கொரிய அதிபர்கள்

வட கொரியா, தென் கொரியா இடையேயான பிரச்சினைகளுக்கு இடையே இருநாட்டுத் தலைவர்களும் கடிதங்களைப் பரிமாறிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கொரிய தீபகற்பத்தின் அரிய அரசியல் நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் பதவிக்காலம் முடிகிறது. இதனையொட்டி அதிபர் பதவியிலிருந்து விடைபெறும் அவர் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். இதனை வட கொரிய அரசு ஊடகமும் உறுதிப்படுத்தியுள்ளது.

தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் எழுதியுள்ள கடிதத்தில், “2018ல் நடந்த உச்சி மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது போல் வட கொரியா, தென் கொரியா இணைப்புக்கான அடித்தளம் அமைப்பதற்கு தொடர்ந்து உறுதியுடன் செயல்படுவேன். மோதல் போக்கை முடிவுக்குக் கொண்டு வந்து இருதரப்பும் பேச்சுவார்த்தை பாதைக்கு திரும்ப வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்,” இந்த கடிதப் பரிமாற்றம் பரஸ்பரம் நம்பிக்கையின் விளைவு. இருதரப்புமே இடையராது அமைதிக்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இது வரலாற்று சிறப்புமிக்க தருணமாகப் பார்க்கப்படுகிறது.

Tamil News