பாகிஸ்தான் ஆளுகைக்குட்பட்ட காஷ்மீருக்கு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் பயணம்-இந்தியா கண்டனம்

காஷ்மீருக்கு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் பயணம்

அமெரிக்க காங்கிரஸின் பெண் உறுப்பினர் இல்ஹான் ஓமர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு (PoK) பயணம் செய்தநிலையில், ​​ அவரின் இந்த பயணத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவித்முள்ளது.

மேலும், இது அவரது “குறுகிய எண்ணம் கொண்ட அரசியல்” என்று அழைத்ததோடு, “பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை” மீறுவதாக உள்ளதாகவும் இந்தியா கூறியுள்ளது.

ஏப்ரல் 20 முதல் ஏப்ரல் 24 வரை நான்கு நாள் பயணமாக பாகிஸ்தானுக்கு சென்ற இல்ஹான் ஒமர், அங்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆகியோரை சந்தித்தார். பின்னர் பாகிஸ்தான்  ஆளுகைக்குட்பட்ட காஷ்மீருக்கு அவர் பயணம் செய்திருந்தார்.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், “தற்போது பாகிஸ்தானால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் இந்திய யூனியன் பிரதேசத்தின் ஒரு பகுதியை, அமெரிக்க பிரதிநிதி இல்ஹான் ஓமர் பார்வையிட்டதை நாம் கவனத்தில் எடுத்துள்ளோம். அத்தகைய அரசியல்வாதி தனது குறுகிய மனப்பான்மை கொண்ட அரசியலை செய்ய விரும்பினால், அது அவருடைய விருப்பம். ஆனால் அதன் நோக்கத்தில் நமது பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை மீறுவது அதை நம்முடையதாக ஆக்குகிறது. இந்த வருகை கண்டிக்கத்தக்கது” என்றார்.

Tamil News