மன்னார், யாழ்ப்பாணத்தில் இருந்து 18 பேர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்

18 பேர் தமிழகத்தில் அகதிகளாக

இலங்கையின் வடக்கு மாகாணம் மன்னார், யாழ்ப்பாணத்தில் இருந்து கர்ப்பிணித்தாய் ஒருவர் உட்பட மேலும் 18 பேர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

இருவேறு சந்தரப்பங்களில் இன்று (22) அதிகாலை தனுஷ்கோடியை சென்றடைந்த இவர்கள் மீட்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மன்னாரில் இருந்து 3 குடும்பங்களை சேர்ந்த 13 பேர் இன்று அதிகாலை தனுஷ்கோடி பகுதியை சென்றடைந்துள்ளனர். இளம் கர்ப்பிணித்தாய் ஒருவர், குழந்தைகள் இருவர் உட்பட 3 குடும்பங்களை சேர்ந்த 13 பேர் இவ்வாறு கடல்வழியாக தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தை சேர்ந்த மேலும் ஐவர் அடங்கிய மேலும் ஒரு குழுவினர் இன்று அதிகாலை தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைகாரணமாக அங்கு வசிக்க முடியாத நிலையிலேயே இவ்வாறு வடக்கு, கிழக்கு மாணாங்களில் வசித்து வரும் தமிழர்கள் தமிழகத்திற்கு அகதிகளாக புலம்பெயர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply