2019 ஓகஸ்ட் 5-ம் திகதி ஜம்மு காஷ்மீர் தொடர்பில் இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையைத் திரும்பப் பெறவேண்டும் என்று ஆர்கனைசேஷன் ஆஃப் இஸ்லாமிக் கோ ஆபரேஷன் என்ற இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புத் தகுதியை இந்திய அரசு இரத்து செய்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி ஓகஸ்ட் 5-ம் திகதி இந்த அறிக்கை வெளியாகியிருந்தது.
இந்த அமைப்பின் பொதுச் செயலகம் வெளியிட்ட அந்த அறிக்கையில்,
ஐ.நா. பாதுகாப்பு சபைத் தீர்மானங்களில் குறிப்பிட்டுள்ளபடி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் சர்வதேச ரீதியில் ஒப்புக் கொள்ளப்பட்ட சர்ச்சைக்குரிய பகுதி என்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் நிராகரித்திருக்கிறது. இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதியான ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் தலையிட அந்த அமைப்புக்கு உரிமை இல்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.